கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு!
நாமக்கல்: கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யுவராஜின் நீதிமன்ற காவலை இம்மாதம் 25-ந் தேதி வரை நீட்டிப்பு செய்து நாமக்கல் மாவட்ட தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ. இவர் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தார்.

இதுதொடர்பாக திருச்செங்கோடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் யுவராஜ் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையே யுவராஜூக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இதனால் ஆகஸ்ட் மாதம் 24-ந் தேதி யுவராஜ் சென்னையில் மீண்டும் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரது நீதிமன்ற காவல் செப்டம்பர் 21ந் தேதியோடு முடிவடைந்தது. இதையடுத்து நாமக்கல் மாவட்ட தலைமை நீதிபதி, யுவராஜின் நீதிமன்ற காவலை அக்டோபர் 4-ந் தேதி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் யுவராஜூன் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை இன்று விசாரித்த நாமக்கல் நீதிமன்றம் யுவராஜை 25ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications