3 நாள் விசாரணைக்குப் பின் ஜாகீர் உசேன் மீண்டும் சிறையில் அடைப்பு
சென்னை: சென்னை குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட ஜாகீர் உசேன் 3 நாள் போலீஸ் விசாரணைக்குப் பின் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது.
பெங்களூரில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 1 ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது, ரயிலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்தன.
இந்த சம்பவத்தில் சுவாதி என்ற பெண் பலியானார். 14 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்துக்கு சில தினங்களுக்கு முன்பு இலங்கையை சேர்ந்த தீவிரவாதி ஜாகீர் உசேனை, கியூ பிரிவு போலீசார் சென்னையில் கைது செய்தனர்.
தீவிரவாதி ஜாகீர் உசேன் கைது, அதைத் தொடர்ந்து வெடிகுண்டு வெடிப்பு போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜாகீரை கியூ பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். 3 நாள் காவலில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்தக் காவல் முடிந்த நிலையில் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை மீண்டும் புழல் ஜெயிலில் அடைக்க நீதிபதி சிவசுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார். அவரை மீண்டும் 13 ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications