தமிழகத்தில் மே 10 முதல் மே 24 வரை முழு லாக்டவுன்.. டாஸ்மாக் கடைகள் செயல்படாது.. குடிகாரர்கள் சோகம்
சென்னை: ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த இரண்டாவது அலையால் இந்தியாவில் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் நேற்றைய தினம் கொரோனா தொற்றின் தினசரி எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது. திமுக அரசு பொறுப்பேற்பதற்கு முன்பே கொரோனாவை குறைக்க ஸ்டாலின் பல ஆலோசனைகளை நடத்தி வந்தார்.

கொரோனா
நாளுக்கு நாள் கேஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் ஸ்டாலின் நடத்திய ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்ற மருத்துவர்கள் அனைவரும் முழு லாக்டவுன் குறித்து அறிவுறுத்தினர். மேலும் அடுத்த இரு வாரங்களுக்கு கொரோனாவின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

டாஸ்மாக் கடைகள்
இதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு லாக்டவுனை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்பட தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு
கடந்த கொரோனா காலத்தில் கடந்த ஆண்டும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தது. இதையடுத்து ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்ட போது அதிமுக அரசு டாஸ்மாக் கடைகளும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது அனைவரின் கண்டனத்துக்குள்ளானது.

டாஸ்மாக் கடைகள்
இதையடுத்து இந்த இரண்டாவது அலையின் போதும் தமிழகத்தில் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டு, சென்னைக்குள்பட்ட சலூன்கடைகள், அழகு நிலையங்கள் மூடப்பட்டன. அப்போதும் டாஸ்மாக் இயங்க எந்த தடையும் விதிக்கப்படவில்லை. திமுக அரசு வெற்றி பெற்றவுடன் மற்ற கடைகளை போல் டாஸ்மாக் கடைகளும் நண்பகல் 12 மணியுடன் இயங்க உத்தரவிடப்பட்டது.
-
Vijay vs CBN: அக்கட மாநிலத்தை கொஞ்சம் பாருங்க விஜய் சார்.. ஒரேநேரத்தில் 9 விமான நிலையமாம்.. ஆனா தமிழ்நாட்டில்? -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications