தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவுக்கு சொந்தமாக கார் இல்லையாம்.. ஆனால் விதியை பார்த்தீர்களா?
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ள முதல்வர் சந்திரசேகர ராவ் தன்னிடம் சொந்தமாக கார் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்துக்கு வரும் 30ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாகும். மனுக்களை வாபஸ் பெற 15 ஆம் தேதி கடைசி நாள்.

இந்த நிலையில் தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனிடையே தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கஜ்வெல் மற்றும் கமாரெட்டியில் போட்டியிடுகிறார்.
அவர் கஜ்வெல்லில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தார். அப்போது அவரது பிரச்சார வாகனம் நிஷமாபாத் மாவட்டத்தில் அர்மூர் பகுதியில் திடீரென பிரேக் பிடித்த போது தெலுங்கானா அமைச்சர் கே.டி. ராமாராவ் உள்ளிட்டோர் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் சந்திரசேகர ராவ் தாக்கல் செய்த வேட்புமனுவில் சுவாரஸ்ய சம்பவங்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2018ஆம் ஆண்டு ஆண்டு தனக்கு 22 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக கேசிஆர் வேட்புமனுவில் கூறியிருந்தார். அது போல் அவருக்கு கார் இல்லை என்றும் கூறியிருந்தார். அவரது பாதுகாப்புக்கு 4 கார்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இணைக்கப்பட்டுள்ளது.
69 வயதாகும் கே சந்திரசேகர ராவ் தனது வேட்புமனுவில் வங்கிக் கணக்கு டெபாசிட் உள்பட ரூ 17.83 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அது போல் மனை வி ஷோபா பெயரில் நகைகள், வங்கி இருப்பு உள்பட ரூ 7.78 கோடி அசையும் சொத்துகள் உள்ளனர். அது போல் கேசிஆருக்கு பஞ்ஜாரா ஹில்ஸ் பகுதியிலும் கரீம் நகரிலும் வீடு இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடுகளின் மதிப்பு ரூ 8.50 கோடியாகும். அவருக்கு விவசாய நிலமோ அல்லது காலி இடமோ இல்லை என குறிப்பிட்டுள்ளார். முதல்வரின் ஆண்டு வருமான 2022- 2023 ரூ 1.60 கோடியாகும். மனைவியின் ஆண்டு வருமானம் ரூ 8.68 லட்சமாகும். அவருக்கு இந்துஸ்தான் அன்டிவைடட் பேமில் இருந்து ரூ 7.88 கோடி வருமானமும் கிடைக்கிறது.
கே சந்திரசேகர ராவ் சித்திபெட்டில் உள்ள அரசு கல்லூரியில் பிஏ படித்துள்ளார். அவர் மீது 9 குற்ற வழக்குகள் உள்ளன. எல்லாவற்றுக்கும் மேல் கே சந்திரசேகருக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லையாம். ஆனால் விதியை பாருங்கள் அவருடைய கட்சி சின்னம் கார்தான். அது போல் தன்னை விவசாயி என கூறிக் கொள்ளும் கேசிஆருக்கு விவசாய நிலமே இல்லையாம்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications