சிறுமியை 6 மாதமாக கூட்டு பலாத்காரம் செய்த 4 பேர்.. நிர்வாணமாக்கி மரத்தில் கட்டி வைத்த அவலம்
தஞ்சை: திருட்டு பட்டம் கட்டி சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை கொடுத்து நிர்வாணமாக்கிய அவலம் தஞ்சையில் நடந்துள்ளது.
திருவையாறைச் சேர்ந்த 14 வயது சிறுமி. இவர் தந்தை ஆற்றில் மணல் அள்ளுவதற்கு செல்லும்போதெல்லாம் சிறுமியை இவர் அழைத்து செல்வது வழக்கம். அப்போது அந்த சிறுமியை கடந்த 6 மாதங்கள் 16 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இந்த பிரச்சினைக்கு முழுக்க முழுக்க காரணம் சிறுமியின் தந்தை என்ற கோபத்தில் அவரது தாய் வீட்டை விட்டு கோபித்து கொண்டு சென்றுவிட்டார். தாயை சமாதானப்படுத்த பக்கத்துவீட்டிலிருந்து போன் வாங்கியுள்ளார் சிறுமி.
[ஆந்திராவில் 37 தமிழர்கள் கைது.. செம்மரம் கடத்தியதாக குற்றச்சாட்டு!]

மரத்தில் கட்டிய அவலம்
இதை பார்த்த 16 வயது சிறுவனின் உறவினர்கள் 5 பேர் சிறுமி செல்போனை திருடிவிட்டதாக கூறி கடந்த 18-ஆம் தேதி அந்த பெண்ணுக்கு கூட்டு பாலியல் தொல்லை கொடுத்து நிர்வாணமாக்கி மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதி
பின்னர் அந்த சிறுமிக்கு சூடு போட்டுள்ளனர். இதையடுத்து அந்த 5 பேரும் சென்றுவிட்டவுடன் கட்டுகளை அவிழ்த்து கொண்டு வாழைத்தோப்புக்கு சென்றார் சிறுமி. அப்போது அங்கிருந்த விவசாயி மூலம் தந்தைக்கு தகவல் கொடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

4 பேர் பலாத்காரம்
இது தொடர்பாக திருவையாறு மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியின் தந்தை அளித்துள்ள புகாரில், தனது மகளை 16 வயது சிறுவன் உள்பட 4 பேர் 6 மாதங்களாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும், இவ்விவகாரம் அறிந்த சிறுவனின் உறவினர்களான 3 ஆண்கள், தனது மகளை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

திருச்சி சிறையில் அடைப்பு
சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில், கோபாலகிருஷ்ணன், சிவக்குமார், மகேந்திரன், வித்யா ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். 16 வயது சிறுவன் சிறார் சீர்திருப்பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளான்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications