"பத்திக்கிச்சே".. 25 வயது இளைஞனுடன் 40 வயது பெண் ஓட்டம்.. இப்ப லலிதா கர்ப்பம்.. கதறும் 22 வயது மகன்
25 வயது இளைஞரை 40 வயது பெண் திருமணம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது
தஞ்சாவூர்: 25 வயதுள்ள இளைஞருடன் ஏற்பட்ட பழக்கம் 40 வயது லலிதாவுக்கு காதலாக கனிந்துள்ளது.. இறுதியில் லலிதா காதலில் விழுந்து.. கல்யாணத்தில் முடிந்து.. இப்போது கர்ப்பம் வேற..!
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்தவர் அய்யப்பன்... சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார்... இவரது மனைவி பெயர் லலிதா.. 40 வயதாகிறது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகனுக்கு 22 வயதாகிறது.. இன்ஜினீயரிங் படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்... 2வது மகனுக்கு 21 வயதாகிறது.. கல்லூரியில் பிபிஏ 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

மாயம்
இந்நிலையில், கடந்த 13ம் தேதி லலிதா, திடீரென வீட்டில் இருந்த மாயமானார்.. அத்துடன் வீட்டில் இருந்த 20 பவுன் நகைகளையும் காணவில்லை.. இதனால் மகன்கள் 2 பேரும் பதறிப்போய் தாயை தேடி அலைந்துள்ளனர்.. இந்த நேரத்தில், வெளிநாட்டில் உள்ள கணவருக்கு, ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பி உள்ளார் லலிதா.. அந்த மெசேஜில், தனக்கு கடலூரை சேர்ந்த ஒருவருடன் திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார்.. அத்துடன், தன்னுடைய கல்யாண போட்டோவையும் கணவனுக்கு அனுப்பி வைத்துள்ளார்..

ஷேம் + லலிதா
இதை பார்த்ததும் அதிர்ந்து போன கணவன், மூத்த மகனுக்கு இந்த விஷயத்தை சொன்னார். விஷயத்தை கேள்விப்பட்டு அதற்கு மேல் அதிர்ந்து போன மகன், ஒரத்தநாடு போலீசில் லலிதா மீது புகார் கொடுத்தார்... இந்த புகாரின்பேரில் போலீசார் அந்த ஜோடியை தேடி வருகின்றனர்.. கணவன் வெளிநாட்டில் இருந்துள்ள நிலையில், லலிதாவின் புத்தி தடுமாறி உள்ளது.. மகன்களுடன் லலிதா மகன்களுடன் ஒரத்தநாட்டில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்..

நெருக்கம் - இணக்கம்
மகன்கள் இருவரும் காலேஜ் சென்றுவிடும் நிலையில், ஃபேஸ்புக்கில் கவனம் செலுத்தி உள்ளார்.. அப்போதுதான் அந்த இளைஞர் அறிமுகமாகி உள்ளார்.. அவருக்கு 25 வயதாகிறது.. பேஸ்புக் மூலம் நெருக்கமும் ஏற்பட்டு, திருமணம் வரை சென்றுள்ளது.. 5 ஆண்டுகளாக இந்த பேஸ்புக் பழக்கம் இவர்களுக்குள் இருந்துள்ளது. அதாவது, லலிதா காதலில் விழுந்தபோது, அந்த இளைஞருக்கு அப்போது ஜஸ்ட் 20 வயதுதான் போலும்.. 40 வயதுள்ள லலிதா, 25 வயது இளைஞரை திருமணம் செய்துள்ள நிலையில், இப்போது 4 மாதம் கர்ப்பமாக இருக்கிறாராம்.

மெசேஜ்
தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தையும் கணவனிடமே அந்த மெசேஜில் சொல்லி உள்ளார்.. அத்துடன் காதலனுடன் லலிதா இருக்கும் போட்டோவையும் அனுப்பி வைத்துள்ளார்.. இந்த ஜோடி இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.. 20 பவுன் நகைகளுடன் லலிதா மாயமாகி உள்ளதால், இளைஞரை தேடி கடலூருக்கு சென்றுள்ளனர் போலீசார்.. இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications