மகன் இறந்த அன்று கூட ஜனாதிபதியை வரவேற்க திண்டுக்கல் சென்றவர் உபயதுல்லா! தமிமுன் அன்சாரி நினைவூட்டல்!
பெற்ற மகன் மரணம் அடைந்த அன்று கூட ஜனாதிபதியை வரவேற்க திண்டுக்கல் சென்றவர் உப
தஞ்சாவூர்: முன்னாள் அமைச்சரும், திமுக முக்கிய பிரமுகருமான உபயதுல்லாவின் நினைவேந்தல் கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.
வணிகர்கள், சமூக ஆர்வலர்கள் , இலக்கியவாதிகள் என பல தரப்பட்டோரும் இணைந்து உபயதுல்லா நினைவேந்தல் நிகழ்ச்சியை தஞ்சையில் நடத்தினார்கள்.
இதில் குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டு உபயதுல்லா அமைச்சராக இருந்த காலத்தில் அவர் ஆற்றிய பணிகளை பட்டியலிட்டனர்.
அந்த வகையில் தமிமுன் அன்சாரி அந்த நிகழ்வில் பேசியதாவது;

உபயத்துல்லா
''உபயத்துல்லா 14 வயதிலேயே 'திராவிடம் வெல்க 'என கரும்பலகையில் எழுதி கொள்கையை பேச தொடங்கியவர். இலக்கியவாதிகளையும் , கலைஞர்களையும் எப்போதும் ஊக்குவித்தார். வெளியில் சொல்லாமல், விளம்பரம் தேடாமல் தானம் தர்மங்களையும் ,உதவிகளையும் சாதி ,மதம் பாராமல் செய்தார்.''

மகன் மரணம்
''உபயத்துல்லா அமைச்சராக இருந்தபோது, அவரது மகன் இறந்துவிட்டார். பெற்ற மகன் இறந்த அன்று கூட அந்த துக்கத்தையும் தாங்கிக்கொண்டு, கடமை தவறாமல் ஜனாதிபதியை வரவேற்க திண்டுக்கல்லுக்கு சென்றார் உபயத்துல்லா. இதை அறிந்த ஜனாதிபதி அவரை வீட்டுக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டார். அந்தளவுக்கு கடமை உணர்வோடு அமைச்சராக இருந்த போது பணியாற்றியவர்.''

சீட் கேட்கவில்லை
''2006 தேர்தலில் இவர் போட்டியிட உபயதுல்லா முதலில் சீட்டே கேட்கவில்லை. இதை அறிந்த கலைஞர் அவரை அழைத்து தனிாயில் போட்டியிடச் சொல்லி சீட் வழங்கி, பிறகு அமைச்சராக்கவும் ஆக்கினார். அவரை நாணயத்தின் மறுபதிப்பு என்றார் கலைஞர். அதனாலேயே வணிக வரித்துறையை அவருக்கு வழங்கினார். ''

தமிமுன் அன்சாரி
''உபயதுல்லாவுக்கு தமிழக அரசு அண்ணா விருதை வழங்கியபோது, அலைபேசியில் அழைத்து வாழ்த்தினேன். பதிலுக்கு அவர் எனது 'புயலோடு போராடும் பூக்கள்' கவிதை தொகுப்பை படித்ததாக கூறி பாராட்டினார். பிறரை ஊக்குவிப்பதில் அவர் சளைக்காத பண்பாளராக இருந்தார். இவ்வாறு அவர் குறித்த பல சிறப்புகளை மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி பட்டியலிட்டு பேசினார்.''












Click it and Unblock the Notifications