அண்ணாமலைக்கு உளவியல் பிரச்சனை இருக்கிறது.. அதிமுக பாஜக விரிசல் என்பது நாடகம் : திருமாவளவன் தாக்கு!

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கவன ஈர்ப்பிற்காக நாள்தோறும் கண்டதையும் பேசிவருகிறார், அவருக்கு உளவியல் சிக்கல் உள்ளது என்றும், அதிமுக - பாஜக விரிசல் என்பது தற்காலிக நாடகம் என்றும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

சமீப காலமாக அதிமுக - தமிழ்நாடு பாஜக இடையே வார்த்தைப் போர் நிலவி வருகிறது. சமீபத்தில் பேரறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியது அதிமுகவினரை கோபத்திற்கு உள்ளாக்கியது. இதையடுத்து அண்ணா குறித்துப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனாலும், அண்ணாமலை மன்னிப்ப்பு கேட்க மாட்டேன், நான் சொன்னது சரிதான் என முரண்டு பிடித்தார். இதையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்தார்.

Annamalai has psychological issue: says Thirumavalavan

இந்நிலையில், அதிமுக மூத்த நிர்வாகிகள் டெல்லி சென்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்தனர். மேலும், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்ததாகவும், அப்போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை அந்தப் பதவியில் இருந்து நீக்கினால் தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்க முடியும் என்று வலியுறுத்தியதாகவும் ஆனால் தேசிய தலைமை அதனை புறக்கணித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், தஞ்சாவூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன், "பாஜக - அதிமுக விரிசல் என்பது, ஒரு தற்காலிகமான அரசியல் நாடகம். அவர்கள் கூட்டணியை ஒருபோதும் முறித்துக்கொள்ள மாட்டார்கள். அதிமுகவை நம்பி பாஜக இருக்கிறது, பாஜகவை நம்பி அதிமுக இருக்கிறது. இந்த இரண்டு கட்சிகளும் தனித்து நிற்பதற்கு வாய்ப்பே இல்லை.

அண்ணாமலை கவனம் ஈர்ப்பதற்காக கண்டதை எல்லாம் பேசுகிறார். ஆதாரமற்றதெல்லாம் பேசுகிறார். பேரறிஞர் அண்ணாவையே கொச்சைப்படுத்தும் விதமாக பேசுகிறார். இவை அனைத்தும் அரசியலில் தன்னைப் பற்றி ஒவ்வொரு நாளும் விவாதிக்க வேண்டும், கவனம் ஈர்க்க வேண்டும் என்கிற ஒரு உளவியல் சிக்கல் அவருக்கு இருக்கிறது. ஆகவே மனதில் பட்டதையெல்லாம் பேசுகிறார்.

அதிமுகவினர், பாஜகவை தூக்கிச் சுமப்பதையே தங்களது கடமையாக எண்ணி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாஜகவை தோளில் சுமக்க சுமக்க அதிமுக வாக்கு வங்கியை மேலும் மேலும் இழக்க நேரிடும். எனவே இடைக்காலத்தில் நிகழும் இந்த முரண்கள், விவாதங்கள் தமிழக அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

நீட் தேர்வில் தகுதி பெற பூஜ்ஜியம் பெர்சண்டைல் மதிப்பெண் என்ற மத்திய அரசின் முடிவே, நீட் தேர்வு தோல்வி அடைந்து விட்டது என்பதற்கு ஒரு சான்று. அவர்களே இன்றைக்கு ஒப்புக்கொண்டு தேர்வு எழுதி இருந்தால் போதும் தேர்ச்சி பெற தேவையில்லை என்று அறிவிக்கக்கூடிய நிலைமை உள்ளது. ஒட்டுமொத்தமாக அகில இந்திய அளவில் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+