மாட்டிக்கினாரு ஒருத்தரு.. ரூ.100 கோடி மோசடி கும்பலுக்கே விபூதி அடித்த பாஜக மாநில நிர்வாகி கைது!
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் கிரிப்டோ கரன்சி முதலீடு எனக் கூறி ரூ.100 கோடி சுருட்டிய கும்பல் சிக்கிய நிலையில், அவர்களிடமிருந்து பல கோடி ரூபாயை பெற்றதாக பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் அர்ஜூன் கார்த்திக். இவர் ஶ்ரீ சாய் கிரிப்டோ கன்சல்டன்சி என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். கிரிப்டோ கரன்சியில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம்தோறும் ரூ.15,000 வீதம் 18 மாதங்களுக்குக் கிடைக்கும் என்று அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் கூறி, முதலீடுகளைப் பெற்றுள்ளார். மேலும், முதலீடு செய்யும் நபர் வேறு நபர்களை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்தால் மாதம் ரூ.1,000 கூடுதலாக கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தைகளை அள்ளித் தூவியுள்ளார்.

இதனை நம்பிய அப்பகுதி மக்கள், இந்த சாய் கிரிப்டோ நிறுவனத்தில் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். பிற நபர்களை சேர்த்து விட்டும் வந்துள்ளனர். ஆரம்பத்தில் சரியாகப் பணம் கொடுத்து வந்த நிறுவனம், திடீரென்று பணம் தராமல் நிறுத்தியுள்ளது. இது குறித்து முதலீடு செய்தவர்கள் விசாரித்தபோது, விரைவில் பணம் மொத்தமாக திருப்பி தரப்படும் என்று கூறியுள்ளனர். ஆனால், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பணத்தை வசூலித்த அர்ஜூன் கார்த்திக் மற்றும் உடனிருந்த 5 பேரும் தலைமறைவாகி விட்டனர். மேலும், அலுவலகமும் 5 மாதங்களாக பூட்டியே கிடந்துள்ளது.
இதையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதலீடு செய்தவர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தியதில், இந்த கிரிப்டோ கரன்சி மோசடி கும்பல் 8,000 பேரிடம் இருந்து சுமார் 100 கோடி ரூபாயையை ஏமாற்றியுள்ள அதிர்ச்சித் தகவல் வெளிவந்தது. தொடர்ந்து, தலைமறைவானவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் அர்ஜூன் கார்த்திக், இவாஞ்சலின் அபிலாதரஸ், நிறுவனத்தின் பார்ட்னரான ராஜா, அவரது மகன் செல்வக்குமார் ஆகியோரை கடந்த 13ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து கிரிப்டோ கரன்சி நடத்தி வந்த அர்ஜூன் கார்த்திக்கிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பாஜக நிர்வாகி சாக்கோட்டை கார்த்திகேயன் என்பவர் தன்னை மிரட்டி பல கோடி ரூபாய் அபகரித்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
சாக்கோட்டை கார்த்திகேயன் பாஜக ஓபிசி அணியின் மாநில செயலாளராக உள்ளார். இவர் மீது ஏற்கனவே கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பல நிலுவையில் உள்ளன. நாச்சியார்கோவில் மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் ரவுடி பட்டியலில் கார்த்திகேயன் பெயர் உள்ளது. இதனையடுத்து கார்த்திகேயனை கைது செய்த போலீசார் கிரிப்டோ கரன்சி மோசடியாளர்களிடமிருந்து பணம் பெற்றது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பகோணம் கிரிப்டோ கரன்சி விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில் மேலும் பல முக்கிய தகவல்கள் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது. கிரிப்டோ கரன்சி மோசடி கும்பலிடம் இருந்து பாஜக நிர்வாகி பல கோடி ரூபாய் பணம் பெற்றிருப்பதாக கூறியிருப்பதால், மேலும் பல அரசியல் புள்ளிகளும் இந்த விவகாரத்தில் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications