Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிளஸ் 2 பொதுத்தேர்வு.. தேர்வுக்கு வராதவர்களுக்கு மீண்டும் ஜூன் மாதத்தில் வாய்ப்பு.. அன்பில் மகேஷ்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு குறித்து அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு மீண்டும் ஜூன் மாதம் வாய்ப்பு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அதேபோல் பொதுத்தேர்வை எழுதாதவர்களின் எண்ணிக்கை 5 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ளதாக அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழ் பாடத்தேர்வை சுமார் 51 ஆயிரம் மாணவர்களும், ஆங்கில பாடத்தேர்வை சுமார் 50 ஆயிரம் மாணவர்களும் எழுதவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அதிகளவில் மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுத்தேர்வை எழுத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 அன்பில் மகேஷ் பேட்டி

அன்பில் மகேஷ் பேட்டி

இந்த நிலையில் தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், பொதுத் தேர்வு வரும்போது மாலை நேரத்தில் மாணவர்களுக்கு ஒரு மணிநேரம் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அதிநவீன ஆய்வகம் மூலம் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறோம். இருந்தாலும், நம் மாணவர்கள் எந்த வகையிலும் ஏமாந்துவிடக் கூடாது என்பதற்காக நீட் தேர்வுக்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

இடைநிற்றல் மாணவர்கள்

இடைநிற்றல் மாணவர்கள்

கடந்த 2021-22-ஆம் கல்வியாண்டில் இடைநிற்றல் மாணவர்களின் எண்ணிக்கை 1.90 லட்சமாக இருந்தது. இடைநிற்றல் குழந்தைகளைக் கண்டுபிடித்து நிகழ் கல்வியாண்டில் சேர்த்தும், அவர்கள் ஓரிரு நாட்கள் வந்து, மற்ற நாள்கள் வரவில்லை என்றாலும், அவர்களை நீக்குமாறு நாங்கள் அறிவுறுத்தவில்லை. அவர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் கல்வி தொடர்பு இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களை விட்டுவிடாமல், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வழங்குமாறு அறிவுறுத்துகிறோம். அவர்களைப் படிக்க வைக்க வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம்.

5 சதவிகிதமாக உயர்வு

5 சதவிகிதமாக உயர்வு

இடைநிற்றலான 1.90 லட்சம் மாணவர்களை அடையாளம் கண்டு நிகழ் கல்வியாண்டில் சேர்க்கவில்லை என்றால், இத்தேர்வில் 6.60 லட்சம் முதல் 6.70 லட்சம் பேர்தான் எழுதுவர். ஆனால், இப்போது 8.81 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். ஆண்டுதோறும் தேர்வுக்கு வராத மாணவர்களின் எண்ணிக்கை 4.5 முதல் 4.6 சதவிகிதமாக இருப்பது வழக்கம். இது நிகழாண்டில் 5 சதவிகிதம் வரை வந்துள்ளது. இது தொடர்பாக அதிக கவனம் செலுத்த வேண்டும் எனக் கல்வித் துறை அலுவலர்களிடம் கூறியிருக்கிறோம்.

ஆயத்தப் பணிகள்

ஆயத்தப் பணிகள்

மேலும், இதற்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் இணையவழியில் கூட்டம் நடத்தவுள்ளேன். இதற்கான காரணத்தையும் கண்டறியுமாறும் அறிவுறுத்தியுள்ளோம். அடுத்து 10ம் வகுப்புத் தேர்வு தொடங்கப்படவுள்ளதால், அதற்கான ஆயத்தப் பணியும் தொடங்கிவிட்டோம். மாணவர்கள் அச்சப்படாமல் பொதுத் தேர்வு எழுதுவது தொடர்பாக, அறிவுரைகள் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் மீண்டும் வாய்ப்பு

ஜூன் மாதத்தில் மீண்டும் வாய்ப்பு

நிகழாண்டு பொதுத் தேர்வுக்கு வராதவர்களுக்கும், தேர்வில் பங்கேற்று எழுதி தேர்ச்சி பெறாதவர்களுக்கும் தனியாகச் சிறப்பு வகுப்புகள் நடத்தி, அவர்களை ஊக்கப்படுத்தி, வரும் ஜூன் மாதம் நடைபெறும் உடனடித் தேர்வில் பங்கேற்கச் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
தேர்வுக்கு வராதவர்களின் எண்ணிக்கை குறைய வேண்டும் என்பதற்காக முதல்வரும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலைமை படிப்படியாகக் குறையும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+