ஸ்டாலினை பார்த்ததுமே.. பூரித்த தஞ்சாவூர்! சட்டென தேனீர் கடைக்குள் நுழைந்து டீ குடித்த முதல்வர்!

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், திமுக அனைத்து தொகுதிகளுக்கும் தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை தஞ்சாவூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது சாலையோர கடையில் தேநீர் அருந்தினார்.

கடந்த 2019ம் ஆண்டை போலவே, இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகத்தை பொறுத்த வரையில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளன. திமுகவை பொறுத்த அளவில், 21 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கியுள்ளது.

Chief Minister M K Stalin drinking tea at a roadside shop during polling in Thanjavur

தென் சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன்

மத்திய சென்னை - தயாநிதி மாறன்

வட சென்னை - கலாநிதி வீராசாமி

ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர் பாலு

காஞ்சிபுரம் - செல்வம்

வேலூர் - கதிர் ஆனந்த்

அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்

திருவண்ணாமலை - சி.என் அண்ணாதுரை

ஆரணி - தரணி வேந்தன்

கள்ளக்குறிச்சி - மலையரசன்

தருமபுரி - ஆர். மணி

கோவை - கணபதி ராஜ்குமார்

பொள்ளாச்சி - ஈஸ்வர சாமி

சேலம் - செல்வ கணபதி

ஈரோடு - பிரகாஷ்

நீலகிரி - ஆ ராசா

தஞ்சாவூர் - ச.முரசொலி

பெரம்பலூர் - அருண் நேரு

தேனி - தங்க தமிழ்ச்செல்வன்

தென்காசி - ராணி ஸ்ரீகுமார்

தூத்துக்குடி - கனிமொழி

ஆகிய தொகுதிகளில் திமுக நேரடியாக போடடியிடுகிறது. இந்நிலையில், தேர்தல் பரப்புரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கியிருந்தார்.

திட்டத்தின்படி, நேற்று திருச்சி மற்றும் பெரம்பலூரில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பரப்புரை மேற்கொண்டார். இன்று தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினத்தில், இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார். இன்று காலை 7 மணிக்கே முதலமைச்சர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட தொடங்கிவிட்டார். தஞ்சை சத்யா விளையாட்டு மைதானத்தில் இளைஞர்களிடம் தஞ்சை லோக்சபா தொகுதி வேட்பாளர் முரசொலிக்கு வாக்கு சேகரித்தார். அப்போது சாலையோர கடையில் அவர் டீ சாப்பிட்டார்.

இந்த புகைப்படத்தை திமுகவினர் சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து "சிங்கில் டீ குச்சிட்டு வேலை பார்ப்பார்கள் திமுகவினர்" என்று கூறி வருகின்றனர்.

திங்கட்கிழமை, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு வாக்கு சேகரிக்கிறார். அதனை தொடர்ந்து வரும் 26ம் தேதி தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம், 27ம் தேதி தென்காசி மற்றும் விருதுநகர், மார்ச் 29ம் தேதி, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி, 30ம் தேதி சேலம் என பரப்புரை மேற்கொள்கிறார். மேலும், வரும் 31ம் தேதி ஈரோடு, நாமக்கல், கரூரில் வாக்கு சேகரிக்கும் முதலமைச்சர், ஏப்ரல் 2ம் தேதி வேலூர் மற்றும் அரக்கோணத்தில் பரப்புரையை மேற்கொள்கிறார்.

ஏப்ரல் 3ம் தேதி திருவண்ணாமலை மற்றும் ஆரணி, ஏப்ரல் 5ம் தேதி கடலூர் மற்றும் விழுப்புரம், ஏப்ரல் 6ம் தேதி சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறையில், ஏப்ரல் 7ம் தேதி புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.

அதனை தொடர்ந்து, ஏப்ரல் 9ம் தேதி மதுரை, சிவகங்கையிலும், ஏப்ரல் 10ம் தேதி தேனி, திண்டுக்கல்லிலும் ஏப்ரல் 12ம் தேதி திருப்பூர், நீலகிரியிலும் 13ம் தேதி கோவை மற்றும் பொள்ளாச்சியிலும் ஏப்ரல் 15ம் தேதி திருவள்ளூர், வடசென்னையிலும், 16ம் தேதி காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூரிலும் பரப்புரை மேற்கொள்கிறார்.

இறுதியாக ஏப்ரல் 17ம் தேதி தென்சென்னை மற்றும் மத்திய சென்னையில் தனது பரப்புரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவு செய்கிறார். தேர்தல் பரப்புரைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லும் போது, காலத்தின் அருமை கருதி, கட்சியினர் வேறு எவ்வித நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என திமுக தலைமை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+