கீழடி, பொருநையை தொடர்ந்து.. சோழ மண்ணில் மிளிர போகும் தமிழர் பெருமை! தமிழ்நாடு அரசு கலக்குதே!
தஞ்சாவூர்: தமிழர்களின் தொல் பெருமையை பறைசாற்றும் விதமாக கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியகம் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதை தொடர்ந்து தற்போது சோழர் அருங்காட்சியகம் அமைக்க, டெண்டர் கோரப்பட்டிருக்கிறது. விரைவில் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்திய தீபகற்பத்தின் வரலாறு என்பது வடக்கில் இருந்து எழுத கூடாது, மாறாக தெற்கில் இருந்துதான் எழுதப்பட வேண்டும் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

இதற்கு இரண்டு மிகப்பெரிய ஆதாரங்கள் நம்மிடையே இருக்கின்றன. ஒன்று கீழடி. இன்னொன்று பொருநை. கீழடியில் மேற்கொள்ளப்பட்ட 4ம் கட்ட அகழாய்வில், செங்கல் கட்டுமானங்கள், சுடுமண் உறைகிணறுகள், மழைநீர் வடியும் வகையில் இரு துளைகளுடன் விரல்களால் அழுத்திப் பள்ளமிடப்பட்ட அமைப்பைக் கொண்ட கூரை ஓடுகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன.
இது தவிர விலை உயர்ந்த தங்க அணிகலன் பகுதிகள், உடைந்த பகுதிகள், செம்புப் பொருட்கள், இரும்புக் கருவிகளின் பாகங்கள், சுடுமண் சொக்கட்டான் காய்கள், வட்டச்சில்லுகள், சுடுமண் காதணிகள், கண்ணாடி மற்றும் விலை உயர்ந்த மணிக்கற்களும் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டன. இதை ஆய்வு செய்ததில் கீழடி பொருட்கள் கி.மு 6ம் நூற்றாண்டை சேர்ந்தவை என கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் ஒரு சமூகம் 2,600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவை பெற்றிருக்கிறது என்பதற்கு உதாரணமாக கீழடி இருக்கிறது.
பொருநை இதைவிட மிகப் பழமையான இடமாகும். இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் சுமார் 3,200 ஆண்டுகள் பழமையானவை என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் மனித நாகரிகம் நதிக்கரையில்தான் தோன்றி வளர்ந்தன. எகிப்தில் நைல் நதி நாகரிகம், வட இந்தியாவில் சிந்து நதி நாகரிகம் என்பதை போல தென்னிந்தியாவில் தாமிரபரணி ஆற்றில் மனித நாகரிகம் தோன்றி வளர்ந்தது.
இங்கு கண்டெடுக்கப்பட்ட நெல் மணிகள் அமெரிக்காவில் பீட்டா அனாலிடிக் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஆய்வில் இந்த நெல் சுமார் 3200 ஆண்டுகளுக்கு முந்தியது என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த நெல்மணிகள் முதுமக்கள் தாழியிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. தமிழர்களின் பெருமையை சர்வதேச அளவில் வெளிப்படுத்தும் விதமாக இந்த கண்டுபிடிப்புகளை தமிழக அரசு அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்தியிருக்கிறது.
அந்த வகையில் கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியகம் கவனம் பெற்றிருக்கிறது. இந்நிலையில் தஞ்சையிலும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
தென்னிந்தியாவின் பெரும் பகுதிகளை ஆண்ட சோழப் பேரரசின் பங்களிப்பைப் போற்றவும், அக்கால கலைப்பொருட்களைப் பாதுகாக்கவும், தஞ்சாவூரில் ஒரு மிகப்பெரிய சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என, பழனிவேல் தியாகராஜன் கடந்த 2023ம் ஆண்டு பட்ஜெட் அறிவிப்பில் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து அருங்காட்சியகம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது சூடுபிடித்திருக்கின்றன. சோழர்களுக்காக தஞ்சாவூரில் 51 கோடி ரூபாய் மதிப்பில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதனையடுத்து விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications