நடந்து சென்று மக்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! தஞ்சையில் திரண்ட தொண்டர்கள்!

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: இன்று மாலை கல்லணையிலிருந்து தண்ணீரை திறந்துவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தஞ்சையில் 3 கி.மீ தூரத்திற்கு நடந்து சென்று மக்களை சந்தித்திருக்கிறார். அவரை சந்திக்க ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் திரண்டதால், தஞ்சை நகரம் விழாக்கோலமாக காட்சியளித்தது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். இந்நிலையில், இன்றும் நாளையும் தஞ்சாவூரில் பயணம் மேற்கொள்வார் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

MK Stalin DMK

அதன்படி, இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்த அவர், அங்கிருந்து காரில் கல்லணைக்கு சென்றார். அங்கு அங்கு மாலை 6 மணிக்கு கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீரை திறந்து விட்டார். பின்னர் தஞ்சை வந்த அவர், கலைஞர் அறிவாலயத்தில் இருந்து ரயிலடி, ஆத்துப்பாலம் வழியாக பழைய பஸ் நிலையத்துக்கு 3 கிமீ தூரம் ரோடு ஷோ நடத்தினார். நடந்து சென்று மக்களை சந்தித்தார். பின்னர் பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த, கலைஞரின் சிலையை திறந்து வைத்தார்.

முன்னதாக கல்லணை திறப்பு குறித்து கூறிய அவர், "பொன்மணியென நெல்மணி விளைந்திடப் புறப்பட்ட பொன்னி நதியால் தஞ்சை செழிக்கட்டும்! உழவர் பெருமக்கள் வளம் காணட்டும். காடுகொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம்பெருக்கிப் பிறங்கு நிலைமாடத்து உறந்தை போக்கி எனப் பட்டினப்பாலை பாடும் கரிகாற்பெருவளத்தான் உருவாக்கிய கல்லணையில் நீர் திறக்கப்பட்டது" என்று கூறியுள்ளார்.

தனது x பக்கத்தில், "காடுகொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம்பெருக்கிப் பிறங்கு நிலைமாடத்து உறந்தை போக்கி" எனப் பட்டினப்பாலை பாடும் கரிகாற்பெருவளத்தான் உருவாக்கிய கல்லணையில் நீர் திறக்கப்பட்டது! பொன்மணியென நெல்மணி விளைந்திடப் புறப்பட்ட பொன்னி நதியால் தஞ்சை செழிக்கட்டும்! உழவர் பெருமக்கள் வளம் காணட்டும்!" என்று பதிவிட்டிருக்கிறார்.

நடந்த சென்று மக்களை சந்தித்த முதல்வர், இன்றிரவு தஞ்சை சுற்றுலா மாளிகையில் தங்குகிறார். நாளை காலை எம்எல்ஏ துரை சந்திரசேகர் இல்ல திருமண நிகழ்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அங்கிருந்து தஞ்சை சரபோஜி மன்னர் அரசு கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு 1.50 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் முதல்வர், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+