'பாரதம்' பெயரா? ஒன்னும் தப்பில்லைங்க.. ஒரே போடு போட்ட காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்!

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டின் அழைப்பிதழில் 'இந்திய' குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக, 'பாரதத்தின்' குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடப்பட்டிருப்பது பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், "பாரத்/பாரதம் என்கிற பெயரை பயன்படுத்துவதில் தவறில்லை" என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் 'இந்தியா' கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்தியா கூட்டணி என்கிற பெயரில்தான் அனைத்து கூட்டங்களையும் எதிர்க்கட்சிகள் நடத்தி வருகின்றன. எதிர்க்கட்சிகள் இந்த 'இந்தியா' எனும் பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று பாஜக தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில் நாட்டின் பெயரை இந்தியா என்பதிலிருந்து பாரதம் என்று மாற்ற மத்திய அரசு முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Congress MP Karti Chidambaram has said that there is nothing wrong in using the name Bharat

இதற்கேற்றாற்போல பாஜக தலைவர்கள் பலர், "இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர். பாரதம்தான் நமது உண்மையான பெயர்" என்று கூறி வருகின்றனர். இந்த சலசலப்புகள் ஒருபுறம் இருக்கையில் மறுபுறம் மற்றொரு பஞ்சாயத்து வெடித்து கிளம்பியிருக்கிறது. அதாவது இந்த மாதம் 9,10 தேதிகளில் டெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இவர்களுக்கு இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கான அழைப்பிதழ்கள் சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் 'பாரதத்தின்' குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக 'இந்திய' குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் இம்முறை பாரதம் என்று குறிப்பிடப்பட்டிருப்பது, ஏற்கெனவே இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என்று பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வரும் கருத்தியலுக்கு வலு சேர்ப்பதை போல இந்த நடவடிக்கை இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் 1ன் படி, 'இந்தியாவாக இருந்த பாரதம் மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்' என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது இந்த மாநிலங்களின் ஒன்றியம் கூட தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது" என்று ட்வீட் செய்து விமர்சித்திருந்தார். இதனைத் தொடர்ந்து திமுக, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளும் பாஜகவுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளன.

இந்நிலையில், "பாரத் என்கிற பெயரை பயன்படுத்துவதில் தவறில்லை" என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், அலுவல் ரீதியாக பெயர் மாற்றப்படும்போது பல்வேறு துறைகளில் பிரச்னை எழும் என்றும், உதயநிதி தலைக்கு விலை நிர்ணயம் செய்த சாமியாரை கைது செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். தேசிய அளவில் 'பாரத்' எனும் பெயருக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது கார்த்தி சிதம்பரம் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+