அரைத்த மாவையே.. அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா...நடிகர் விஜய் தவெக குறித்து முத்தரசன் கிண்டல்!
தஞ்சாவூர்: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், ஏற்கனவே அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார்; மாவுதான் வீணாகப் போகும் என்று திமுக கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். மேலும் திமுகவை எதிர்ப்பதற்காகவே கட்சியை தொடங்கி இருப்பதால் திமுகவை எதிர்த்து நடிகர் விஜய் பேசுகிறார் என்றும் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அண்மையில் விக்கிரவாண்டி வி.சாலையில் மாநாடு நடத்தினார். இந்த மாநாட்டில் பிளவுவாத மற்றும் திராவிட மாடல் அரசுதான் எதிரிகள் என்றார். ஆனால் பாஜக பெயரை சொல்லவில்லை.

சென்னையில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்கள் பலவற்றிலும் திமுக அரசு என விமர்சிக்கப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒரே ஒரு தீர்மானத்தில் மட்டும் ஒன்றிய பாஜக அரசு குறிப்பிடப்பட்டிருந்தது. பெரும்பாலான தீர்மானங்களில் பாஜக என்பதை தவிர்த்துவிட்டு ஒன்றிய அரசு மட்டுமே என இடம் பெற்றிருந்தது.
விக்கிரவாண்டி மாநாட்டில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என நடிகர் விஜய் அழைப்பு விடுத்த நிலையில் திமுக கூட்டணி கட்சிகளுக்குதான் வலைவீசுகிறார் என்கிற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் நடிகர் விஜய்யின் இந்த அழைப்பை திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடுமையாக விமர்சித்தது.
இந்த நிலையில் சென்னையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், வர்றவன் போறவன்.. புதியதாக கட்சி தொடங்குகிறவன் எல்லாம் திமுக ஒழியனும் அழியனும் என நினைக்கிறாங்க என மறைமுகமாக நடிகர் விஜய்யை விமர்சித்திருந்தார்.
இதேபோல கும்பகோணத்தில் இன்று செய்தியாளர்களை திமுக கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் சந்தித்தார். அப்போது நடிகர் விஜய் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு பதிலளித்த முத்தரசன், திமுகவை எதிர்க்கவே விஜய் கட்சியை தொடங்கி இருக்கிறார். அதனால் திமுகவை எதிர்த்து பேசுகிறார். விஜய் அரைத்த மாவையே அரைத்து கொண்டிருக்கிறார்; இதனால் மாவுதான் வீணாகும் என்றார்.
மேலும் கூட்டணி ஆட்சி குறித்து விஜய் பேசியிருப்பது, அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்றுதான் அழைப்போம் என கிண்டலாகப் பதிலளித்தார். விஜய் கூட்டணியில் விசிக இணையுமா என்ற கேள்விக்கு, விசிக தலைவர் திருமாவளவன்தான் இதற்கு பதிலளிக்க வேண்டும்; அவர்தான் அந்த கட்சியின் தலைவர் என்று பதிலளித்தார் இரா.முத்தரசன்.
-
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்!












Click it and Unblock the Notifications