அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து .. மணல் எடுத்த திமுக பிரமுகர் கைது.. டிஎஸ்பி அதிரடி
தஞ்சை : ஒரத்தநாடு அருகே அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து மணல் எடுத்த திமுக பிரமுகர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து வாகனங்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணதங்குடி மேலையூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவசாமி மகன் நாதன் செல்வராஜ். இவர் தி.மு.கவில் ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினராக உள்ளார்.
இவர் தனக்குச் சொந்தமான விவசாய நிலம் அருகே உள்ள மூரியன் குட்டை எனப்படும் குளத்துக்கு சொந்தமான அரசு புறம்போக்கு இடத்தினை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.

டிஎஸ்பி கேள்வி
அங்கு மீன் குட்டை அமைப்பதற்காக ஜேசிபி மற்றும் டிரக்டர் உதவியுடன் மீன் குட்டை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த ஒரத்தநாடு டிஎஸ்பி சுனில், நேரில் சென்று அரசு இடத்தில் மணல் எடுக்க உரிய அனுமதி பெற்றுள்ளீர்களா எனக் கேட்டுள்ளார்.

தாசில்தார் வருகை
அப்போது நாதன் செல்வராஜ், "இடம் என்னுடையது. நான் யாரிடமும் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை" என வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது . டி.எஸ்.பி சுனில், தாசில்தார் சீமானுக்கு தகவல் கொடுத்தார்.

மணல்
பின்னர் சீமான், வி.ஏ.ஓ சுபாஷினி, சர்வேயர்கள் சம்பவ இடத்துக்கு வந்து குறிப்பிட்ட இடத்தை அளந்து பார்த்தனர். இதில் நாதன் செல்வராஜ் அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து மணல் எடுத்தது உறுதியானது.

டிஎஸ்பி அதிரடி
இதையடுத்து அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த செல்வராஜ், டிராக்டர் உரிமையாளர் கண்ணதங்குடி கீழையூரை சேர்ந்த ராஜாங்கம்(54), கண்ணதங்குடி கீழையூர் ஆண்டி நத்தம்காடு சேர்ந்த டிராக்டர் டிரைவர் பிரபு (36), பூவாத்தூர் மேலத்தெருவை சேர்ந்த ஜேசிபி டிரைவர் ராமசந்திரன் (48) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய கண்ணுக்குடி மேற்கு பகுதியை சேர்ந்த ஜேசிபி உரிமையாளர் அப்பாத்துரை(56) போலீசார் தேடி வருகின்றனர்.
-
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications