லுங்கி-டவுசருடன் வரக்கூடாது..தஞ்சை அருகே விஏஓ விதித்த ஆடைக்கட்டுப்பாடு..அதிர்ச்சியடைந்த கிராம மக்கள்
தஞ்சை: தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி விஏஓ அலுவலகத்திற்கு சான்றிதழ் வாங்க வரும் பொதுமக்களுக்கு ஆடை கட்டுப்பாட்டை விஏஓ விதித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்த புகார்கள் வந்ததையடுத்து விஏஓ கரிகாலனுக்கு தற்காலிகமாக பணி விடுப்பு ஆணை வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
தஞ்சை அருகே உள்ள செங்கிப் பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகராக கரிகாலன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
முன்னாள் விமானப்படை வீரரான கரிகாலன் சான்றிதழ் கேட்டு வரும் விவசாயிகளிடம் மிகவும் கெடுபிடியாக நடந்து கொள்வதாக அங்குள்ள கிராம மக்கள் மத்தியில் சொல்லப்படுகிறது.

உள்ளே வர அனுமதிக்காமல்..
இதனிடையே, செங்கிப்பட்டியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வெளியே போர்டு ஒன்றை வைத்திருந்தார். அதில், கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சான்றிதழ் கேட்டு வருபவர்கள் கைலி, அரைக்கால் டவுசர் அணிந்து வரக்கூடாது. அதேபோல், பெண்கள் நைட்டி அணிந்து வரக்கூடாது என்று எழுதப்பட்டு இருந்தது. மேலும், விவசாய மக்கள் நிறைந்த அப்பகுதியில் விவசாயிகள் யாராவது லுங்கி அணிந்து வந்தால் உள்ளே விட அனுமதி மறுத்ததாகவும் விஏஓ கரிகாலம் மீது புகார்கள் எழுந்தது.

லுங்கி அணிந்து இருந்ததால்
இந்த நிலையில், விவசாயி ஒருவர் தனது மகனுக்கு ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பிப்பதற்காக விஏஓ அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அந்த விவசாயி லுங்கி அணிந்து இருந்ததால், விஏஓ கரிகாலன் விவசாயியை அலுவலகத்திற்குள் அனுமதிக்காமல் வெளியில் காக்க வைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களிலும் பரவியது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

வேலைக்கு போகும் போது..
இந்த நிலையில் இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "செங்கிப்பட்டியை சுற்றி சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயிகள், கூலி வேலைகளுக்கு செல்லும் தொழிலாளர்கள்தான். எனவே வேலைக்கு போகும் போதோ.. வேலைக்கு சென்று விட்டு வரும்போதோ.. சான்றிதழ் வாங்குவதற்காக விஏஓ அலுவலகம் செல்வதுண்டு. விவசாய தொழிலாளர்கள் லுங்கி, டவுசர் அணிந்து கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது.

தற்காலிக பணி விடுப்பு ஆணை
ஆனால், விஏஓ இப்படி நடந்து கொள்வது மேலும் அலைக்கழிக்க வைக்கும் வகையில் இருப்பதாகவும் நியாயமற்றதாக இருப்பதாகவும் கூறினர். இது குறித்த புகார்கள் வந்ததையடுத்து விஏஓ கரிகாலனுக்கு தற்காலிகமாக பணி விடுப்பு ஆணை வழங்கி தஞ்சாவூர் ஆர்டிஓ,(பொ).,பழனிவேல் நடவடிக்கை எடுத்தார். மேலும், உரிய விசாரணைக்கு பிறகு அவரை வேறு வருவாய் கோட்டத்திற்கு இடமாற்றம் செய்ய முடிவு திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications