Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக கட்சி பூசல்.. மாவட்ட பொருளாளர் வார்டே புறக்கணிப்பு! ஆட்சியரிடம் அதிராம்பட்டினம் மக்கள் புகார்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: மாவட்ட பொருளாளருக்கும், நகராட்சி துணைத் தலைவருக்கும் இடையிலான உட்கட்சிப் பூசல் காரணமாக தங்களின் வார்டு புறக்கணிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து அதிராம்பட்டினம் மக்கள் புகார் அளித்து உள்ளனர்.

 Due to rift in DMK our ward in neglected - Adirampattinam people complaint to district collector

அதிராம்பட்டினம் நகராட்சியின் துணைத் தலைவராகவும், திமுக நகர செயலாளராகவும் பதவி வகித்து வருபவர் இராம.குணசேகரன். இவருக்கும் அதிராம்பட்டினம் முன்னாள் சேர்மனும் திமுக தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளருமான அஸ்லம் இடையே பல ஆண்டுகளாக உட்கட்சிப் பூசல் இருந்து வருகிறது. எனவே அதிராம்பட்டினம் திமுக என்பது குணசேகரன் அணி, அஸ்லம் அணி என 2 அணியாக செயல்பட்டு வருகிறது. அஸ்லமின் மனைவி சித்தி ஆயிஷா அதிராம்பட்டினம் 2வது வார்டுக்கு உட்பட்ட சி.எம்.பி.லேன், அம்பேத்கர் நகர் பகுதி கவுன்சிலராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் உட்கட்சிப் பூசல் காரணமாக 2 வார்டை நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக அஸ்லமும், அப்பகுதி மக்களும் குற்றம்சாட்டி வந்தனர். இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் நகராட்சி அலுவலகம் முன் அஸ்லம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். தங்கள் வார்டுக்காக வைக்கப்பட்ட கோரிக்கைகள், தீர்மானங்களை ஏற்க மறுப்பதாக அவர் தெரிவித்து இருந்தார். அதன் பிறகும் எந்த விதமான அடிப்படை தேவைகளை நகராட்சி நிர்வாகம் செய்துத் தரவில்லை எனக்கூறி வார்டு மக்களே தற்போது போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

 Due to rift in DMK our ward in neglected - Adirampattinam people complaint to district collector

சாலை, கழிவு நீர் வடிகால், தெரு விளக்குகள், சி.எம்.பி வாய்க்கால் பராமரிப்பு, வெறிநாய்களை கட்டுப்படுத்துவது, சுகாதார பணிகள் போன்ற அடிப்படை தேவைகள் எதையும் நகராட்சி முறையாக செய்யவில்லை என்றும், இது தொடர்பாக பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறி அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மனுவில் கையெழுத்திட்டு திரளாக நகராட்சி அலுவலகம் சென்று நகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி துணைத் தலைவர் குணசேகரனை சந்தித்து மனு அளித்தனர்.

ஒரு வாரமாகியும் நடவடிக்கை எடுக்காததால் வேன் மூலம் 2 வது வார்டு மக்கள் திரளாக தஞ்சாவூருக்கு சென்று மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பை சந்தித்து மனுவை வழங்கினர். அதில், "அதிராம்பட்டினம் 2வது வார்டு பகுதி நகராட்சியால் B ZONE என வகைப்படுத்தப்பட்டு அதற்கு ஏற்ப அதிக வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரிலேயே அதிக வரி செலுத்தும் வார்டாக இது உள்ளது. அதேபோல் இந்த ஊரிலேயே அதிகளவில் புறக்கணிக்கப்படும் வார்டும் இதுதான்.

 Due to rift in DMK our ward in neglected - Adirampattinam people complaint to district collector

சாலை, வடிகால், தெரு விளக்குகள், சி.எம்.பி வாய்க்கால் பராமரிப்பு, தூய்மை பணிகள், வெறிநாய்களை கட்டுப்படுத்துவது என எந்த அடிப்படை பணிகளையும் நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளாமல் பாரபட்சமாக நடந்துகொள்கிறது. இது தொடர்பாக பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததை தொடர்ந்து வார்டு மக்களிடம் கையெழுத்து பெற்று, அனைவரும் திரளாக கடந்த அக்டோபர் 3ம் தேதி நகராட்சி அலுவலகம் சென்று ஆணையர், நகராட்சி துணைத் தலைவரை நேரில் சந்தித்து மனுவை வழங்கி முறையிட்டோம்.

 Due to rift in DMK our ward in neglected - Adirampattinam people complaint to district collector

வார்டுக்கு நேரில் வந்து ஆய்வு செய்வதாக வாக்குறுதி அளித்த ஆணையர் 10 நாட்களாகியும் வரவில்லை. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. தற்போது மழை பெய்து பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் கொசு தொல்லை அதிகரித்து டெங்கு அச்சுறுத்தலும் உள்ளது. எனவே எங்கள் வார்டு மக்களின் நலன் கருதி அடிப்படைத் தேவைகளை தாமதமின்றி போர்க்கால நடவடிக்கைபோல் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்." என்று குறிப்பிட்டனர்.

 Due to rift in DMK our ward in neglected - Adirampattinam people complaint to district collector

இதனை கேட்ட மாவட்ட ஆட்சியர் மக்கள் கொடுத்த மனுவையும், புகைப்படங்களையும் ஆணையருக்கு அனுப்பி தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதேபோல் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த அதிராம்பட்டினம் நகராட்சி அதிகாரியை அழைத்து இந்த அடிப்படை தேவைகளை கூடவா இன்னும் செய்யவில்லை என கண்டித்ததுடன், மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற உத்தரவிட்டதுடன், அதிராம்பட்டினம் 2 வது வார்டுக்கு நேரில் வந்து ஆய்வு செய்வதாக மக்களிடம் உறுதியளித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+