இபிஎஸ்க்கு அதிமுக வரலாறே தெரியாது.. ஜனதா தளத்திற்கு வேலை பார்த்தவர்.. தடதடக்கும் வைத்திலிங்கம்
மன்னார்குடி: 1984 ஆம் ஆண்டு எடப்பாடி தொகுதியில் ஜனதா தளம் கட்சிக்கு வேலை பார்த்தவர் எடப்பாடி பழனிசாமி. திராவிட வரலாறு, அதிமுக வரலாறு பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாது என்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறினார்.

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளரும் எம்.எல்.ஏவுமான வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் என தேர்வு செய்யப்பட்டது சரி எனக்கூறி தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டு இருப்பது நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உட்பட்டது. தேர்தல் ஆணையத்தின் வழக்கமான நடைமுறை இதுவாகும். நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரே அடுத்த கட்ட செயல்பாடு குறித்து முடிவு எடுக்கப்படும். சட்ட ரீதியாக நாங்கள் பலமாகவே இருக்கிறோம். 100 % எங்களுக்கு வாய்ப்பு உள்ளது.
நீதிமன்ற தீர்ப்பு வரும் ஜூன் மாதம் வரும். அந்த தீர்ப்பின் நிலைமைக்கு ஏற்ப எங்களது முடிவு அமையும்.எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து அதிமுகவை ஒருங்கிணைப்போம். 1984 ஆம் ஆண்டு எடப்பாடி தொகுதியில் ஜனதா தளம் கட்சிக்கு வேலை பார்த்தவர் எடப்பாடி பழனிசாமி. திராவிட வரலாறு, அதிமுக வரலாறு பற்றி தெரியாதவர் எடப்பாடி பழனிசாமி. அவருக்கு தேவை என்றால் சபரீசனுடன் ரகசியமாக போனில் தொடர்பு கொண்டு பேசுவார்.
அவருடைய மனசாட்சிக்கு இதுபற்றி தெரியும். ஊழலைப் பற்றி ஜெயக்குமாருக்கு எந்த தகுதியும் இல்லை. ஜெயக்குமார் ஒரு எடுப்பார் கைப்பிள்ளை. அவருக்கு அரசியலில் எதிர்காலம் கிடையாது. ஜெயக்குமார் எந்த தொகுதியிலும் எம்.எல்.ஏவாக முடியாது. மாநிலங்களவை சீட்டு தனக்கு கிடைக்காதா என்ற ஏக்கத்தில் கிளிப்பிள்ளை போல பேசி வருகிறார்.
விஷசாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்ததற்கு அரசின் மெத்தன போக்குதான் காரணம். விஷ சாராயம் அருந்தி பலியானவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பதை யாரும் தவறு என சொல்லக்கூடாது. நிவாரணம் அறிவித்ததை அரசியலாக பேசக்கூடாது. எடப்பாடி அணியினர் பணம் கொடுத்து எங்களிடம் உள்ள ஒருசிலரை அழைத்துகொண்டிருப்பதால் எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை.
ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் இணைந்து செயல்படுவதை எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள 95 சதவீதம் பேர் வரவேற்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள மாவட்ட செயலாளர்கள் பலர் அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர்கள் எங்களிடம் வந்தால் கண்டிப்பாக சேர்த்துக்கொள்வோம். அடுத்ததாக கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்த இருக்கிறோம்" என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications