அரசு பஸ் - டெம்போ டிராவலர் நேருக்கு நேர் மோதல்.. தஞ்சை செங்கிப்பட்டி அருகே பயங்கர விபத்து.. 4 பேர் பலி!

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அரசுப் பேருந்தும் டெம்போ ட்ராவலர் வேனும் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காயமடைந்த சுமார் 20 பேர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப்பணி நடந்து வருகிறது.

கர்நாடகாவில் இருந்து டெம்போ டிராவலர் வேன் ஒன்று தஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்தது. செங்கிப்பட்டி அருகே மேம்பாலத்தில் வந்த போது, திருச்சியை நோக்கிச் சென்ற அரசு பஸ் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சுமார் 20 காயமடைந்தனர்.

Thanjavur Accident

காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் உயிரிழந்த நான்கு பேர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+