உடல்நலக்குறைவு.. முன்னாள் அமைச்சர் பூண்டி கி.அய்யாறு வாண்டையார் காலமானார்.. பூண்டியில் இறுதிச்சடங்கு
தஞ்சாவூர்: தஞ்சாவூரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பூண்டி கி. அய்யாறு வாண்டையார் இன்று சென்னையில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவருக்கு 86 வயது ஆகிறது.
காங்கிரஸ், அதிமுக கட்சியிலும், டெல்டா மாவட்ட அரசியலிலும் மிக முக்கியமான நபராக இருந்தவர் பூண்டி கி. அய்யாறு வாண்டையார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த ஒரு வாரமாக இவரின் உடல்நிலை மோசமானதை அடுத்து, இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வயோதிகம் காரணமாக இவருக்கு உடலில் பல்வேறு பாதிப்புகள், குறைபாடுகள் இருந்தன. இந்த நிலையில் இன்று அதிகாலை இவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
88 வயது நிரம்பிய பூண்டி கி. அய்யாறு வாண்டையார் 1984ல் தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்வானார். அந்த தேர்தலில் இவர் காங்கிரஸ் கட்சி சார்பாக தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். காங்கிரசில் இவர் முக்கியமான நபராக பார்க்கப்பட்டாலும், அதன்பின் அதிமுகவில் இணைந்தார்.
அதிமுக சார்பாக 2001ல் திருவையாறு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அப்போது அறநிலையத்துறை அமைச்சர் பொறுப்பையும் இவர் வகித்து வந்தார். பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி முன்னாள் தாளாளர் மறைந்த துளசிஅய்யா வாண்டையாரின் சகோதரர்தான் பூண்டி கி. அய்யாறு வாண்டையார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று தஞ்சாவூரில் உள்ள பூண்டி கிராமத்தில் இவருக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications