Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தஞ்சாவூரில் கலக்கிய 4 கிராம் வெள்ளி நாணயம்... போலீசார் தந்ததுமே ஹெல்மெட்டுடன் திகைத்த பைக் ஓட்டிகள்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை மக்களிடம் உணர்த்த காவல்துறையினர் வித்தியாசமான முறையில் தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் இன்று புத்தாண்டு என்பதால், போலீசார் மீண்டும் ஹெல்மெட் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.. இந்த செய்திதான் இணையத்திலும் வைரலாகி கொண்டிருக்கிறது.

சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக, தஞ்சை காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்..

gram 4 Silver Coin Thanjavur Helmet Police 4

வாகன ஓட்டிகள் - வாழைப்பழத் தார்கள்

குறிப்பாக வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணியும்படி வலியுறுத்தி வருகிறார்கள்.. கடந்த 2 மாதங்களுக்கு முன் கூட, தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையிலான போக்குவரத்து போலீசார், தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு இலவசமாக வாழைப்பழத் தார்களை வழங்கியும், தலைக்கவசம் அணியாதவர்களுக்கு இலவச ஹெல்மெட்டுகளை வழங்கியும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தனர்.

இப்படியொரு வித்தியாசமான விழிப்புணர்வுக்கு அன்று கை கொடுத்தவர் ஒரு விவசாயி ஆவார்.. திருவையாறை அடுத்த வடுகக்குடியைச் சேர்ந்த இயற்கை வாழை விவசாயி மதியழகன் என்பவர், தன்னுடைய தோட்டத்தில் விளைந்த 100 வாழைத்தார்களை, "பாதுகாப்பாக தலைக்கவசம் அணிந்து செல்லும் பைக் ஓட்டிகளுக்கு வழங்க வேண்டும்" என்ற கோரிக்கையுடன் தஞ்சை போக்குவரத்து போலீசாரிடம் வழங்கினார்.

ஹெல்மெட் விழிப்புணர்வு

அதுமட்டுமல்ல, தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை நிர்வாகமும், தலைக்கவசம் அணியாமல் சென்ற 50 பேருக்கு இலவசமாக ஹெல்மெட்டுகளை வழங்கி பாதுகாப்பு விழிப்புணர்வுக்கு ஆதரவு தெரிவித்தது.

அனைவரும் தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்பதற்காக இயற்கை வாழை விவசாயி வாழைப்பழத் தார்களை வழங்கியிருந்ததும், தலைக்கவசம் அணியாத 50 பேருக்கு இலவச ஹெல்மெட்டுகள் வழங்கப்பட்டதும் அப்போது இணையத்திலும் பலரது கவனத்தை பெற்றிருந்தது.

தஞ்சாவூர் 4 கிராம் வெள்ளி நாணயம்

இப்படி தஞ்சாவூர் மாவட்டத்தில், 100 சதவீதம் ஹெல்மெட் அணிவதை உறுதி செய்ய பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாகவே, இந்த புத்தாண்டு நாளிலும் ஒரு வித்தியாசமான முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

"தண்டனை அல்ல, பாராட்டே மாற்றத்தை ஏற்படுத்தும்" என்ற எண்ணத்தோடு தஞ்சாவூர் மாநகர போக்குவரத்து போலீசார் வித்தியாசமான முயற்சியை இன்று கையில் எடுத்தனர்..

தஞ்சை ஆற்றுப்பாலம் அருகே, மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில், போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, பைக்கில் முறையாக ஹெல்மெட் அணிந்து வந்தவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.. இதனால் வாகன ஓட்டிகள் திகைத்து நின்றார்கள்.. ஹெல்மெட் அணிந்தும்கூட, ஏன் போலீசார் தடுத்து நிறுத்துகிறார்கள் என்று குழம்பினார்கள்..

அப்போது அவர்களிடம் போலீசார் ஹெல்மெட்டை அணிந்து வாகனம் ஓட்டுவதற்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.. "உங்கள் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம்" என்று சொல்லி, தலா 4 கிராம் எடையுள்ள வெள்ளி நாணயத்தை புத்தாண்டு பரிசாக வழங்கினார்கள்..

திகைத்த பைக் ஓட்டிகள்

இதுபோல மொத்தம் 50 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பாராட்டும், வெள்ளி நாணயங்களும் வழங்கப்பட்டன.

இதை வாகன ஓட்டிகள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. ஆச்சரியத்துடன் மகிழ்ச்சியடைந்தனர்.. சிலர் சிரித்தபடியே நன்றி தெரிவித்து சென்றனர்.. "இப்படி போலீசாரிடம் இருந்து பரிசு கிடைக்கும் என நினைக்கவே இல்லை" என்று சொன்னார்கள்.

இதன் மூலம், ஹெல்மெட் அணிவது கட்டாயம் மட்டுமல்ல... அது உயிரைக் காக்கும் கவசம் என்பதையும் போலீசார் அழுத்தமாக எடுத்துச் சொன்னார்கள்.. இந்த நிகழ்வானது, சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாக மாறி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+