தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் திருப்பம்.. தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களும் போராட்டம்

ஜாக்டோ ஜியோ போராட்டத்தை அடுத்து தற்போது தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆசிரியர்கள் போராட்டம்- வீடியோ

    தஞ்சாவூர்: ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மாற்று தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு முயன்று வருகிறது. இந்த நிலையில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் தற்போது போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள்.

    ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்போது மிக பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் ஆசிரியர்கள் எல்லோரும் இன்று மாலைக்குள் வேலைக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

    முதலில் இன்று காலை 9 மணிக்குள் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று கூறப்பட்டது. தற்போது மாலை 6 மணி வரை இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. காலை பல ஆசிரியர்கள் வேலைக்கு திரும்பாத காரணத்தால் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    இடைநிலை ஆசிரியர்கள் எல்லோரும் கடந்த ஜனவரி 22ம் தேதியில் இருந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள். ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    நிரப்பும்

    நிரப்பும்

    இந்த ஆசிரியர்கள் பணிக்கு வராவிட்டால் அவர்களிடம் இடம் காலிப்பணி இடங்களாக கருதப்படும். காலிப்பணி இடத்தை தற்காலிக ஆசிரியர்கள் மூலமாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்களுக்கு பதிலாக 7,500 ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் புதிய ஆசிரியர்கள் இன்றில் இருந்து நியமிக்கப்பட உள்ளனர்.

    மிக மோசம்

    மிக மோசம்

    இந்த நிலையில் இதற்கான விண்ணப்பங்கள் கடந்த இரண்டு நாட்களாக வாங்கப்பட்டது. பலர் இந்த தாற்காலிக பணியிடத்திற்கு விண்ணப்பித்து இருந்தனர். உடனே வேலை கிடைக்கும் என்பதால் இவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பித்து இருந்தனர்.

    இவர்களும் போராட்டம்

    இவர்களும் போராட்டம்

    ஆனால் தற்போது தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களும் போராட்டம் செய்கிறார்கள். தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் குளறுபடி நடப்பதாக போராட்டம் செய்கிறார்கள். விண்ணப்பத்தை அளித்துவிட்டு தற்போது நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை பெற மறுக்கிறார்கள் என்று போராட்டம் செய்து வருகிறார்கள்.

    மீண்டும் திருப்பம்

    மீண்டும் திருப்பம்

    பல்வேறு பட்டதாரிகள் ஒன்றாக சேர்ந்து போராட்டம் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ஜாக்டோ ஜியோ போராட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த போராட்டம் நடப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    English summary
    Jacto Geo Protest: The new Temporary employees also started a protest against the government for not giving job.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X