லுலுவை விடுங்க.. தஞ்சாவூருக்கு குட்நியூஸ் வருது? மத்திய தமிழ்நாட்டின் முதல் ஷாப்பிங் மால்.. சூப்பர்ல
தஞ்சாவூர்: தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்க்கும் வகையில், விரைவில் தஞ்சாவூரிலிருந்து குட்நியூஸ் விரைவில் வரக்கூடும் என்கிறார்கள்.. இதுகுறித்த உறுதியான தகவல் இதுவரை வராவிட்டாலும், தஞ்சாவூர் இளைஞர்களுக்கு, சிறந்த வாய்ப்பு அமைய போகிறதாம்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள லட்சுமி மில்ஸ் வளாகத்தில், லுலு ஹைப்பர் மார்க்கெட் 1.20 லட்சம் சதுர அடியில் மிக பிரம்மாண்டமாக கட்டி முடித்து, மிகச்சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.

கோயம்புத்தூரில் அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் அடக்குவதாக இந்த ஹைப்பர் மார்க்கெட் திகழ்ந்து வருகிறது.. கடந்த வருடம் செய்தியாளர்களிடம் பேசிய லூ.லூ நிறுவனத்தின் ஓனர் யூசூப் அலி புதிய தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
நெற்களஞ்சியம்: அப்போது "தஞ்சாவூரிலும் பெரிய பிளானுடன் கால் பதிக்க போகிறோம். விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் தஞ்சாவூரில், மிகப்பெரிய மாடர்ன் ரைஸ் மில் அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம்.. இதனால், இளைஞர்களுக்கு பெரும் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் நம்பப்பட்டு வருகிறது. " என்று கூறியிருந்தார்.
இதற்கு நடுவில், தமிழக அரசு பிள்ளையார் பட்டி கிராமத்தில் டைடல் பார்க் அமைக்க, 30.50 கோடி திட்ட மதிப்பீட்டில் 55 ஆயிரம் சதுர அடியில் தரைத்தளம், 3 மாடிகள் கொண்ட கட்டிடம் பிரம்மாண்டமாக கட்டியிருக்கிறது. ஒருபக்கம் லுலு மால், இன்னொருபக்கம் டைடல் பார்க் என இருபெரும் கட்டிடங்களை எதிர்நோக்கி தஞ்சை மக்கள் காத்திருக்கும் நிலையில், திடீரென புதிய மால் ஒன்று தஞ்சையில் வரப்போவதாக தகவல் வெளியானது.
பணிகள் மும்முரம்: அந்தவகையில், தஞ்சாவூரில் மிகப்பெரிய மால் ஒன்றை அமைக்க லாங்கவால் குழுமம் சார்பில் திட்டமிடப்பட்டது... Langval குழுமத்தின் சார்பில் சுமார் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில், டேனியல் தாமஸ் நகரில் கடந்த 2 வருடங்களாகவே இந்த மால் கட்டும் பணிகள நடந்து வந்தன..
இப்போது இறுதிக்கட்டத்துக்கும் பணிகள் வந்துவிட்டதாகவும், ஷாப்பிங் மட்டுமின்றி, பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் இதில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
எனவே, விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது... ஆனால், இன்னும் தேதி முடிவாகவில்லை.. சமீபத்தில் இந்த நிறுவனத்தின் KFC சிக்கன் கடை லாங்வால் மாலில் திறக்கப்பட இருப்பதாகவும், அதற்கு ஆட்கள் தேர்வு செய்யும் பணியும் நடைபெற்ற நிலையில், விரைவில் நல்ல செய்தி வெளியாகலாம் என்கிறார்கள்.
மகிழ்ச்சி செய்தி: "லாங்வால் மால்" (Langval Mall) பயன்பாட்டுக்கு வந்துவிட்டால், மத்திய தமிழ்நாட்டின் முதல் ஷாப்பிங் மால் என்ற பெருமையை இது பெற்றுவிடும். அதுமட்டுமல்ல, இந்த லாங்வால் ஷாப்பிங் மாலில் பல்வேறு கடைகளுக்காக புதிய வேலைவாய்ப்புகள் தஞ்சை மாவட்ட இளைஞர்களுக்காக உருவாகும் என்றும் நம்பப்பட்டு வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications