தூக்கி போட்ட ரிமோட்டை வேறு ஆள் தூக்கிட்டு ஓடிட்டான்.. கமல்ஹாசன் யாரை சொல்கிறார் என்பது புரிகிறதா?
தஞ்சாவூர்: ரிமோட்டை தூக்கிப்போட்டீர்களே. எதற்காக திமுகவில் சேர்ந்தீர்கள் என்று கேட்கிறார்கள். விமர்சிக்கும் உரிமை ஜனநாயகத்திற்கு உண்டு. ஏன் மறுபடி திமுகவிற்கு போனீர்கள் என்றால், ரிமோட்டை வேறு ஒருவன் தூக்கிட்டு ஓடிட்டான். அப்படியாக, அங்கு போகக்கூடாது. நமது மாநில ரிமோட், நமது மாநிலத்தில் தான் இருக்க வேண்டும். கல்வியும் அப்படித்தான் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நடிகரும், மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கூறினார்.
சினிமா பாடலாசிரியரான கவிஞர் சினேகனின் தந்தை சிவசங்கு படத்திறப்பு நிகழ்வு தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள புது காரியப்பட்டி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் நடந்தது. இந்த நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

இந்த நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரான நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், கட்சிக்கு அப்பாற்பட்டது அன்பு,அதற்கு அப்பாற்பட்டது தொண்டும் தான்.. அதனால் தான் நான் முதலில் அரசியல் கட்சி ஆரம்பிக்காமல் - தொண்டு வழங்கி கொண்டு- பிறகு அரசியலில் வந்து, அங்கிருந்த மூத்தவர்களிடமும் அறிவுரை பெற்றுக் கொண்டு (என்னிடம் நீங்கள் அறிவுரை பெறுவது போல்), அதாவது என்னைவிட மூத்த கட்சியிடம் நான் அறிவுரை பெற்றுக்கொண்டு, இங்கு கட்சி தொடங்கி இருக்கிறேன். இதில் மாற்றுக்கருத்து இருந்தே ஆக வேண்டும். அதன் பெயர்தான் ஜனநாயகம். ஆனால் நாடு என்று வரும்போது, நாம் கூடி நின்றாக வேண்டும்.
எதற்காக டிஎம்கேவில் (திமுகவில்) போய் சேர்ந்தீங்க.. நீங்க தான் ரிமோட் கண்ட்ரோலை எல்லாம் தூக்கிப்போட்டீர்களே டெலிவிஷன் மேலே என்று கேட்கிறார்கள். ஏன் மறுபடி திமுகவிற்கு போனீர்கள் என்றால், விமர்சிக்கும் உரிமை ஜனநாயகத்திற்கு உண்டு. ரிமோட்டை நான் தூக்கி போட்டேன்.. வேறு ஆள் தூக்கிட்டு ஓடிட்டான். (அப்படி கமல் சொன்னதுமே அவரது ரசிகர்கள், யாரை சொல்கிறார் என்று புரிந்தது போல் கத்தி கூச்சலிட்டனர்)
அப்படியாக, அங்கு போகக்கூடாது. நம்முடைய ரிமோட் நம்முடைய மாநிலத்தில் இருக்க வேண்டும். கல்வியும் அப்படித்தான் (எங்கள் மாநிலத்தின் கட்டுப்பாட்டில்) இருக்க வேண்டும் என்று நினைக்கும் நாங்கள் எப்படி ரிமோட்டை கொடுப்போம்.. சரி பரவாயில்லை ரிமோட்டை எடுத்துட்டு வாங்க திருப்பி.. பரவாயில்லை.. ஒளித்தாவது வைப்போம்...

இனிமேல் ஒருவரை ஒருவர் ரிமோட்டால் அடித்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில் எவனாவது வந்து ரிமோட்டை எடுத்துக்கொண்டு போய் விடுவான்..அப்படின்னு எடுத்த முடிவுதான் இந்த திமுக கூட்டணி. புரிந்தால் புரிந்து கொள்ளுங்கள், இல்லை என்றால் சும்மா இருங்கள் (அப்படி சொன்னதுமே சினேகன் மற்றும் அவரது மனைவி உற்சாக கைதட்டினார்கள்). ஜனநாயகம் என்று வந்துவிட்டால், இந்த தொல்லைகள் எல்லாம் இருந்தே தீரும். இதை புரிந்து கொள்ளுங்கள்.
இதை வேண்டாம் என்று மாற்று அரசியல் என்பது நினைத்தால் பாசிசம்.. இந்த அரசியல் செய்தி போதும் என்று நினைக்கிறேன். மற்றவர்களுக்கு இங்கு நாம் சொன்ன அன்பின் செய்தி ஓடாது.. போதவே போதாது.. அதனை தொடர்ந்து நாங்கள் பேசிக்கொண்டே இருப்போம். உங்களுக்கான செய்தி சொல்லியாகிவிட்டது. நன்றி" இவ்வாறு கமல்ஹாசன் பேசினார். கமல்ஹாசன் ரிமோட்டை தூக்கிகொண்டு வேறு ஆள் ஓடிவிட்டதாக கூறியிருக்கிறார். அதுயார் என்று நினைக்கிறீர்கள்.கமல்ஹாசன் சொல்ல வருவது உங்களுக்கு புரிகிறதா என்பதை கமெண்டில் கூறுங்கள்.












Click it and Unblock the Notifications