எலான் மஸ்க்குடன்தான் போட்டி.. இந்தியாவில் விரைவில் தினமும் செயற்கைகோள் ஏவும் நிலை.. மயில்சாமி
தஞ்சை: நாள்தோறும் செயற்கைக்கோள் ஏவும் நிலை விரைவில் வரும் என இஸ்ரோ விஞ்ஞானியும் சந்திரயான் 1 திட்ட இயக்குநருமான மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
தஞ்சை தொழில் வர்த்தக சங்கம் சார்பில் அரையாண்டு பொதுக் குழு மற்றும் சிறப்பு கூட்டத்தில் சந்திரயான் 1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் இந்தியாவில் திருவனந்தபுரத்தில் எளிமையான முறையில் செயற்கைகோள் அனுப்பும் பணி தொடங்கப்பட்டது.

இந்த துறையில் இந்தியா தற்போது படிப்படியாக முன்னேறியுள்ளது. அந்த முன்னேற்றம் இன்று உலக அளவில் விண்வெளி துறையில் சிறந்து விளங்கும் 3 நாடுகளில் இந்தியா ஒன்றாக வளர்ந்துள்ளது. நிலவுக்கு இதுவரை 3 முறை விண்கலன்களை அனுப்பியிருக்கிறோம்.
நிலவில் உள்ள கனிம வளத்தை இனி அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. அப்படி ஆராய்ச்சியின் முடிவில் என்னென்ன வளங்கள் நிலவில் இருக்கின்றன என்பதை தெரிந்து கொண்டு அடுத்த 10 ஆண்டுகளில் பூமிக்கு என்னென்ன கனிமங்கள் தேவையோ அவற்றை சந்திரனில் இருந்தே கொண்டு வர வாய்ப்பு உள்ளது.

முன்பெல்லாம் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கு அதிக செலவு ஏற்பட்டது. ஆனால் இப்போது மற்ற நாடுகளை காட்டிலும் நாம் குறைந்த செலவிலேயே செயற்கைக்கோள்களை ஏவி வருகிறோம். ஆண்டுக்கு ஒரு செயற்கைகோள் அனுப்புவது அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் 2021 இல் 1,200 செயற்கைகோள்களும் 2022 ஆம் ஆண்டு 2300 செயற்கைகோள்களும் 2023 இல் 3 ஆயிரம் செயற்கைகோள்களும் அனுப்பப்பட்டுள்ளது.
விரைவில் நாள்தோறும் செயற்கைகோள் ஏவும் நிலை நிச்சயம் வரும். செயற்கைகோளை சிக்கனமான செலவில் விண்ணுக்கு அனுப்புவதில் இந்தியாவுக்கும் எலான் மஸ்குக்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது. எலான் மஸ்கை விட குறைந்த செயற்கைகோளை அனுப்புவதற்கு குலசேகரப்பட்டினம் மண் உதவுகிறது. இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications