விடிகாலையில்.. கதறி அழுது.. பெற்ற குழந்தைகளை ஆற்றில் தள்ளிவிட்ட தாய்.. அலறிய தஞ்சை!

பெற்ற குழந்தைகளை ஆற்றில் தள்ளி கொன்ற தாய் கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: விடிகாலை நேரத்தில் ஆற்று பாலத்துக்கு 2 குழந்தைகளையும் அழைத்து வந்தார் பெற்ற தாய்.. பிறகு ஒவ்வொரு குழந்தையையும் ஆற்றில் தள்ளிவிட்டதுடன், தானும் அதே ஆற்றில் குதித்து விட்டார்.. இந்த சம்பவம் தஞ்சை மாவட்டத்தில் நடந்துள்ளது.

தஞ்சை சேவப்பநாயக்கன்வாரி சேர்ந்தவர் சுரேஷ்.. இவருக்கு 40 வயதாகிறது.. கூலி தொழிலாளி... மனைவி பெயர் செந்தமிழ்செல்வி.. 37 வயதாகிறது.. இவர்களுக்கு சுவேதா என்ற 12 வயது மகளும், கோகுல்செழியன் என்ற 4 வயது மகனும் உள்ளனர்.

mother killed his children near tanjore due to family issue

ஆனால் தம்பதி இடையே தொடர்ந்து குடும்பத்தகராறு இருந்து வந்தது... தினமும் சண்டை போடுவதும் வழக்கமாக இருந்தது.. சம்பவத்தன்றும் இவர்களுக்குள் பிரச்சனை வெடித்துள்ளது.. இதில் ஆத்திரமும், மனமும் உடைந்த செந்தமிழ்ச்செல்வி தற்கொலை செய்ய முடிவெடுத்தார்.

ஆனால், தான் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டால், குழந்தைங்களும் அனாதையாயிடுவார்களே, அவர்களை பெற்ற தகப்பன் சரியாக கவனித்து கொள்ளாமல் விட்டு விடுவாரே என்று எண்ணினார்.. அதனால் குழந்தைகளை கொன்றுவிட்டு, அதன்பிறகு தற்கொலை செய்ய முடிவெடுத்தார்.

அதன்படி விடிகாலை 2 குழந்தைகளையும் சேவப்பநாயக்கன்வாரி பகுதியில் உள்ள கல்லணை கால்வாய் பாலத்திற்கு அழைத்து வந்தார்.. குழந்தைகளும் அம்மா கூப்பிட்டதால் தூக்க கலக்கத்திலேயே வந்து நின்றனர்.. அந்த பாலத்தின் மேலே நின்று கொண்டு கொண்டு, கதறி அழுதபடியே 2 குழந்தைகளையும் ஒவ்வொன்றாக ஆற்றில் தள்ளிவிட்டார்.. பிறகு தானும் அதே ஆற்றில் குதித்தார்.

ஆனால் குழந்தைகளோ "காப்பாத்துங்க... காப்பாத்துங்க".. என்று அலறினர்.. அந்த அலறல் சத்தத்தை கேட்டு, அங்கிருந்த பொதுமக்கள் ஓடிவந்தனர்.. ஆற்றில் நிறைய நீர் இருந்ததால் அவர்களால் காப்பாற்ற முடியாத சூழல்.. அதனால் உடனடியாக தஞ்சை தீயணைப்புநிலையத்திற்கு தகவல் தந்தனர்.. தீயணைப்பு வீரர்கள் வரைந்து வந்து ஆற்றுக்குள் மூழ்கி 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் செந்தமிழ்ச்செல்வியை மட்டும்தான் உயிருடன் மீட்டனர். அவரை தஞ்சை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பியும் வைத்தனர்.. 2 குழந்தைகளும் தண்ணீரிலேயே அடித்து செல்லப்பட்டனர்.... இருந்தாலும் வீரர்கள் தங்கள் தேடும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.. அப்போதுதான், 4 வயது மகனின் சடலம், கண்டிதம்பட்டு பகுதி கல்லணைக்கால்வாயில் கரை ஒதுங்கியது.

அவனது உடலை மீட்டுள்ளனர்.. சுவேதாவை தேடி வருகிறார்கள். இது தொடர்பாக செந்தமிழ்ச்செல்வி மீது போலீசார் கொலை வழக்கு உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்... தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+