தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கும்பகோணத்தில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக் கொடி! சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் மேயர்!

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சியில் தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்ட நிகழ்வு சர்ச்சையில் சிக்கியுள்ளது.

மாநகராட்சி அலுவலரின் கவனக்குறைபாடான செயல்பாட்டால் கொடியேற்றிய மேயர் சரவணன் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

இதனிடையே தேசியக் கொடி விவகாரத்தில் கவனமின்றி செயல்பட்ட மாநகராட்சி ஊழியர் மற்றும் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 பள்ளியில் முதலில் தேசிய கொடி ஏற்றம்..அடுத்து அபின் சப்ளே! பதற வைத்த ஃபோட்டோக்கள்! மிரண்ட அதிகாரிகள் பள்ளியில் முதலில் தேசிய கொடி ஏற்றம்..அடுத்து அபின் சப்ளே! பதற வைத்த ஃபோட்டோக்கள்! மிரண்ட அதிகாரிகள்

கும்பகோணம் மாநகராட்சி

கும்பகோணம் மாநகராட்சி

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் சுதந்திர விழா கொண்டாடப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநகராட்சி மேயர் சரவணன் தேசியக்கொடி ஏற்றினார். கொடி தலைகீழாக பறப்பதை கவனித்த திமுகவை சேர்ந்த துணை மேயர் தமிழழகன் உடனடியாக இது குறித்து மாநகராட்சி அலுவலர்களிடம் கூறினார். இதையடுத்து அவசர அவசரமாக தேசியக் கொடி கீழே இறக்கப்பட்டு சரிசெய்யப்பட்டு மீண்டும் ஏற்றப்பட்டது.

தலைகீழாக கொடி

தலைகீழாக கொடி

இந்த நிகழ்வில் பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள், மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர். சுதந்திரத்துக்காக போராடிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேயர் ஒருவர் தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றலமா என அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இதில் கொடி ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை கவனித்த மாநகராட்சி அலுவலரும், ஊழியரும் தான் தவறு செய்திருக்கிறார்கள் என்பது பின்னர் தெரியவந்தது.

கவனக்குறைவு

கவனக்குறைவு

அவர்களது கவனக்குறைவான பணியால் மேயர் சரவணனுக்கும் சேர்ந்து அவப்பெயர் ஏற்பட்டதாக காங்கிரஸ் பிரமுகர்கள் விளக்கம் அளித்திருக்கின்றனர். இதனிடையே மேயர் சரவணனை சர்ச்சையில் சிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்வு திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதா என்ற கோணத்தில் மேயர் தரப்பு விசாரித்து வருகிறது. ஆட்டோ ஓட்டுநராக இருந்து மேயராக உயர்ந்திருப்பவர் சரவணன் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

    India At 75 | 8 Years of Modi-ல் இந்தியா எதில் வளர்ந்தது ? *Politics | Oneindia Tamil
    சமூக வலைதளங்கள்

    சமூக வலைதளங்கள்

    ஆனால் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றப்பட்ட விவகாரம் எப்படியோ சமூக வலைதளங்கில் வேகமாக பகிரப்பட்டது. இதனிடையே தேசியக் கொடி விவகாரத்தில் கவனமின்றி செயல்பட்ட மாநகராட்சி ஊழியர் மற்றும் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    English summary
    National Flag Hoisting Issue on Congress Mayor Saravanan in Kumbakonam: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சியில் தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்ட நிகழ்வு சர்ச்சையில் சிக்கியுள்ளது.மாநகராட்சி அலுவலரின் கவனக்குறைபாடான செயல்பாட்டால் கொடியேற்றிய மேயர் சரவணன் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.இதனிடையே தேசியக் கொடி விவகாரத்தில் கவனமின்றி செயல்பட்ட மாநகராட்சி ஊழியர் மற்றும் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X