53 வயசுல ஆபாசம் பிடிச்ச தஞ்சாவூர் ஆசிரியர்.. பட்டுக்கோட்டையில் விஜயாவுக்கு சேட்டை! அதிர்ச்சி சம்பவம்
தஞ்சாவூர்: பெண் குழந்தைகளை சீரழிப்போர்களுக்கு கடுமையான தண்டனைகள் நம்முடைய நாட்டில் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும் போக்சோ தண்டனைகளை கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. அதேபோல பள்ளிகளில் போதுமான விழிப்புணர்வு இல்லாததால், நிறைய பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போதும் அதனை வெளியே சொல்ல அச்சப்படுவதாக தெரிகிறது. எனினும் இந்நிலைமை மெல்ல மாறிவருகிறது. பாதிப்புக்கு ஆளாகும் மாணவ, மாணவிகள் இதுகுறித்து தங்கள் பெற்றோரிடம் துணிந்து சொல்கிறார்கள். இதோ இந்த தஞ்சாவூர் சம்பவத்தை பாருங்கள்.
அரசு பள்ளி மாணவிகளுக்கு வகுப்பாசிரியரே பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் சம்பவம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எட்டுப்புளிக்காடு பகுதியில் அரசு நடுநிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.. இங்கு கரம்பயம் கத்திரிக்கொல்லையை சேர்ந்த பாஸ்கர் என்பவர் 5ம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 53 வயதாகிறது..
கடந்த சில நாட்களுக்கு முன்பு, தன்னுடைய 5ம் வகுப்பு மாணவி ஒருவரை, வகுப்பறையில், எழுந்து நின்று படிக்க சொல்லி உள்ளார்.. மாணவியும் எழுந்து நின்று படித்துக்கொண்டிருந்த போது ஆசிரியர் பாஸ்கர், பாலியல் ரீதியாக தொல்லை தந்துள்ளதாக தெரிகிறது. மாணவி உடனே தன்னுடைய பெற்றோரிடம் இதை சொல்லி அழுதுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், பள்ளி தலைமை ஆசிரியை விஜயாவிடம் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது புகார் தந்துள்ளனர்.
தஞ்சாவூர் பாலியல் சீண்டல்
அப்போது விஜயா, ஆசிரியர் பாஸ்கரை வேறு வகுப்பிற்கு மாற்றிவிடலாம் என்று பெற்றோர்களிடம் சொல்லி சமாளித்துள்ளார்.. ஆனால் அதற்கு பிறகு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டாராம். இதனால் மீண்டும் இதுகுறித்து கேட்டதற்கும் பாஸ்கர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். அத்துடன் கொதித்து போய் வந்த பெற்றோரையும் அலட்சியமாக பேசினாராம் விஜயா.
இதனால் மேலும் மனவேதனையும், அதிருப்தியும் அடைந்த மாணவியின் பெற்றோர், போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவலை தந்துவிட்டு, தங்களது உறவினர்களுடன் சேர்ந்து அந்த பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்டதுமே மற்ற பள்ளி மாணவ, மாணவிகளுடன் அவர்களின் பெற்றோர்களும் போராட்டத்தில் பங்கேற்று கொண்டதால் பெரும் பரபரப்பு அங்கு நிலவியது.
பட்டுக்கோட்டை டீச்சர்
இதற்கு பிறகு பெற்றோர்கள் அனைவருமே சேர்ந்து பட்டுக்கோட்டை மகளிர் போலீசிலும் பாஸ்கர் மீது புகார் தந்தனர். இந்த புகாரின்பேரில் போலீசாரும் பாஸ்கரனை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்திருக்கிறார்கள்.. மேலும் அவரிடம் படிக்கும் மாணவிகளிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போதுதான் பாஸ்கர் பற்றின பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன.
அதாவது பாதிக்கப்பட்ட மாணவி தவிர, மேலும் 6 மாணவிகளுக்கு ஆசிரியர் பாஸ்கர் பாலியல் டார்ச்சர் தந்திருக்கிறார்.. இது சம்பந்தமாக ஏற்கனவே 6 மாணவிகளின் பெற்றோர்களும் தலைமை ஆசிரியை விஜயாவிடம் புகாரும் தந்துள்ளார்கள். ஆனால், விஜயா அவர்களது புகாரையும், கண்ணீரையும் கண்டுகொள்ளவேயில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.
விஜயாவும் சஸ்பெண்ட்
இதைக்கேட்டு அதிர்ந்த போலீசார், ஆசிரியர் பாஸ்கர், அவருக்கு உடந்தையாக இருந்ததாக தலைமை ஆசிரியை விஜயா இருவரையுமே போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.. பெற்றோர்கள் புகார்களை தந்தும்கூட, இதுபற்றி கல்வித்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்ததால், தலைமையாசிரியை விஜயாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக அவர்கள் 2 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில், இருவரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications