Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி.. பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த ஹெலிகாப்டர் பிரதர்ஸ் கைது

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: நிதி நிறுவனம் நடத்தி கும்பகோணத்தில் பொதுமக்களிடம் பலநூறு கோடி ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் என அழைக்கப்படும் எம் ஆர் கணேஷ், எம் ஆர் சுவாமிநாதன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Recommended Video

    கும்பகோணத்தையே கலக்கிய ஹெலிகாப்டர் பிரதர்ஸ்.. பண்ணை வீட்டில் கைது

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த சகோதரர்கள் எம்.ஆர்.கணேஷ்- எம்.ஆர்.சுவாமிநாதன். ஸ்ரீநகர் காலணி, தீட்சிதர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த இருவரும் விக்டரி பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர்.

    இவர்கள் வெளிநாடுகளிலும் பல்வேறு தொழில்கள் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

    ஹெலிகாப்டர் பிரதர்ஸ்

    ஹெலிகாப்டர் பிரதர்ஸ்

    இப்பகுதி மக்கள் இவர்களை ஹெலிகாப்டர் பிரதர்ஸ் என்றே குறிப்பிடுகின்றனர். தொழிலில் பல கோடி வரை சம்பாதித்த இவர்கள், தங்களுக்குச் சொந்தமான இடத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைத்து, ஹெலிகாப்டர் ஒன்றையும் சொந்தமாக வாங்கியுள்ளனர். இதனால் இவர்களை ஹெலிகாப்டர் பிரதர்ஸ் என்றே மக்கள் அழைக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்குப் பணம் இரட்டிப்பாக்கி வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை இவர்கள் வெளியிட்டனர்.

    நிதி நிறுவன மோசடி

    நிதி நிறுவன மோசடி

    அதாவது விக்டரி பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் அவர்களுக்கு வெறும் ஓரே ஆண்டில் ரூ 82,000 தரப்படும் என்று அறிவித்தனர். இதுபோன்ற அறிவிப்புகளை நம்பக்கூடாது என ரிசர்வ் வங்கி தொடர்ந்து கூறி வரும் நிலையிலும், பலர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். சமானிய மக்கள் தொடங்கி வணிகர்கள், தொழிலதிபர்கள் என இவர்களின் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

    மோசடி

    மோசடி

    முதலில் சில மாதங்கள் முதலீடு செய்தவர்களுக்குச் சரியாகவே பணத்தைத் திருப்பி அளித்து வந்துள்ளனர். இருப்பினும், கடந்த ஆண்டு முதல் முதலீட்டாளர்களுக்குப் பணத்தைச் சரியான முறையில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இவர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்கள் சுமார் ரூ.600 கோடி வரை மோசடி செய்துவிட்டதாகக் கடந்த ஆண்டு கும்பகோணத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

    ஏழு தனிப்படைகள்

    ஏழு தனிப்படைகள்

    ஹெலிகாப்டர் பிரதர்தஸ் எம்.ஆர்.கணேஷ் தஞ்சை மாவட்ட பாஜகவின் வர்த்தக தலைவராகவும் இருந்தார். பாஜகவில் செல்வாக்கு மிகுந்த நபராக வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில் இந்த குற்றதச்சாடுகள் கிளம்பின. இதனால் அவர்களை பாஜகவும் கட்சியிலிருந்து நீக்கியது. ஹெலிகாப்டர் பிரதரஸ் தங்களிடம் 15 கோடி ரூபாய் மோசடி செய்ததாகத் துபாய் தம்பதி அளித்த புகாரின் அடிப்படையில் ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமாக நடத்தப்பட்டு வந்தது. கடந்த வாரம் தான் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் வீட்டில் இருந்த சொகுசு வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கைது

    கைது

    மேலும் தலைமறைவாக இருந்த ஹெலிகாப்டர் பிரதர்தஸை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். இந்தச் சூழலில் புதுக்கோட்டை வேந்தன்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த ஹெலிகாப்டர் பிரதர்தஸை போலீசார் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து நேற்றிரவு (ஆகஸ்ட் 5) கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஏற்கனவே இந்த நிதி மோசடி விவகாரத்தில் விக்டரி பைனான்ஸ் மேலாளர் ஸ்ரீகாந்த், கணக்காளர் மீரா, ஸ்ரீராம் , வெங்கடேஷான், கணேஷின் மனைவி அகிலா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+