Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தஞ்சையில் குண்டும் குழியுமான சாலைகள்.. வினோதமாக எதிர்ப்பை காட்டிய மக்கள்!

Subscribe to Oneindia Tamil

தஞ்சை: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தரமற்ற சாலை அமைக்கப்பட்டு அவை குண்டும் குழியுமாகவும், சேறும் சகதியுமாகவும் இருப்பதால் சாலையில் வாழைக்கன்றுகளை நட்டு வைத்து அப்பகுதி மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டியுள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் தரமற்று இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக கிராமப்புற பகுதிகளில்தான் இதுபோன்ற விமர்சனங்கள் அதிகம் கிளம்புகின்றன. தரமான சாலைகள் போடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அதிகாரிகளுக்கு கண்டிப்பான உத்தரவு இட்டுள்ள போதிலும் இதுபோன்ற புகார்கள் தொடர்ந்து கிளம்பி வருகின்றன.

 Potholed roads in Tanjore, people protested by planting bananas

ஒப்பந்ததாரர்கள் உரிய முறையில் சாலைகள் அமைப்பது இல்லை என்றும், தரமற்ற நிலையில், சாலைகள் இருப்பதாகவும் எதிர்க்கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டி வருவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி வருகின்றது. இந்த நிலையில்தான், தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்ட சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிப்பதாக புகார்கள் கிளம்பியுள்ளன.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தரமற்ற சாலை அமைக்கப்பட்டு அவை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றதாக புகார்கள் எழுந்துள்ளன. அந்த வகையில் கடைத்தெருவில் உள்ள சாலையில் மழை நீர் தேங்கி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்கள் முதல் பலரும் இந்த சாலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக குண்டும் குழியுமான சாலையை கொண்ட பாதை முழுவதும் நீரில் மூழ்கி பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் என அனைவருமே கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதேபொல் சாலையில் தேங்கி கிடக்கும் நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு போன்ற கொடிய நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.

இதனிடையே, குண்டு குழியுமான சாலைகளில் சேறும் சகதியுமாக இருப்பதால் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக சாலையை ஒழுங்குப்படுத்தி தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மேலும், மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டும் வகையில், சாலையில் வாழைக்கன்றுகளை நட்டு வைத்து இருந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியது. இந்த நிலையில், மக்களின் கடும் எதிர்ப்பை எடுத்து அந்த இடத்தில் தண்ணீர் தேங்காத வகையில் ஜல்லிக்கற்களை நகராட்சி நிர்வாகம் கொட்டிச் சென்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+