இன்று டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை
கஜா புயலை தொடர்ந்து தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர்: கஜா புயலை தொடர்ந்து தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கஜா புயல் காரணமாக தமிழகம் பெரிய பேரிடரை சந்தித்துள்ளது. டெல்டா மாவட்டங்கள் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது. 7 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை அடியோடு மோசமாகி உள்ளது.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மீண்டும் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்தது. ஆனால் இது கடைசியில் வலுவிழந்தது.
இந்த நிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் டெல்டாவில் கனமழை பெய்யும். தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.
திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர், கும்பகோணம், முத்துப்பேட்டை. மயிலாடுதுறை, மன்னார்குடி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கஜா புயல் நிவாரண பணிகள் நடந்து வரும் நிலையில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். மழை காரணமாக பணிகள் பாதிக்கப்படும் நிலையை அடைந்துள்ளது.
சென்னையில் இன்று மாலை மழை பெய்யலாம். காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications