வெள்ளைக்காரன் கால ரயிலை காணோம்.. பட்டுக்கோட்டை வழியே எழும்பூருக்கு ரயில் விடனும்? வலுக்கும் கோரிக்கை
தஞ்சாவூர்: திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் பாதை வழியாக ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு தினசரி இரவு நேர விரைவு ரயில்களை இயக்க வேண்டும் என பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில், "தென்னிந்திய ரயில்வே கம்பெனி 1890 ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் இருந்து முத்துப்பேட்டை வரை மீட்டர் கேஜ் ரயில் பாதை அமைக்க திட்டமிட்டது. 02.04.1894 ந் தேதி மயிலாடுதுறையில் இருந்து முத்துப்பேட்டைக்கு மீட்டர் கேஜ் ரயில் பாதை அமைக்கப்பட்டது. 20.10.1902 ஆம் தேதி முத்துப்பேட்டையில் இருந்து பட்டுக்கோட்டை வரை ரயில் பாதை அமைக்கப்பட்டது. 31.12.1903 ஆம் தேதி பட்டுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி வரை வரையிலும் பின்னர் 29.3.1952 ஆம் தேதி அறந்தாங்கிலிருந்து காரைக்குடி வரையிலும் 187 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டது.

இந்த ரயில் பாதை அமைக்கப்பட்ட பிறகு சென்னை ராமேஸ்வரம் போட் மெயில் இருந்து 2 ரயில் பெட்டிகள் மயிலாடுதுறையில் பிரிக்கப்பட்டு மயிலாடுதுறை - காரைக்குடி பாஸ்ட் பாசஞ்சரில் இணைக்கப்பட்டு திருவாரூர் - பட்டுக்கோட்டை - முத்துப்பேட்டை - அதிராம்பட்டினம் - பேராவூரணி - அறந்தாங்கி வழியாக காரைக்குடி வரை ரயில் இயக்கப்பட்டது.
இந்த இரண்டு ரயில் பெட்டிகளில் இப்பகுதி மக்கள் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கு சென்று வந்தார்கள். 1980 ஆம் ஆண்டு போட் மெயில் இருந்து ஐந்து ரயில் பெட்டிகள் மயிலாடுதுறையில் பிரிக்கப்பட்டு மனோரா எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இணைப்பு ரயிலாக காரைக்குடி வரை படுக்கை வசதிகளுடன் இயக்கப்பட்டது.
பின்னர் 1987 ஆம் ஆண்டு மனோரா எக்ஸ்பிரஸ் கம்பன் எக்ஸ்பிரஸாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு சென்னையிலிருந்து காரைக்குடி வரை இயக்கப்பட்டது. இந்த ரயில் திருவாரூரில் நாகூர் ஆண்டவர் மற்றும் கம்பன் எக்ஸ்பிரஸ் என இரண்டு விரைவு ரயில்களாக பிரித்து இணைப்பு விரைவு இரயிலாக இயக்கப்பட்டது.
எனவே தென்னக ரயில்வே ராமேஸ்வரத்தில் இருந்து காரைக்குடி அறந்தாங்கி - பேராவூரணி - பட்டுக்கோட்டை - அதிராம்பட்டினம் - முத்துப்பேட்டை - திருத்துறைப்பூண்டி - திருவாரூர் - மயிலாடுதுறை - வழியாக தினசரி இரவு நேர ரயில்களை சென்னை எழும்பூருக்கு இயக்க வேண்டும்.
இப்பகுதியில் கிடைக்கும் உள்நாட்டு மற்றும் கடல் மீன்கள் தினசரி இந்த ரயில் வழியாக சென்னைக்கு அனுப்பப்பட்டது. அகல ரயில் பாதைகள் அமைக்கும் பணிகளுக்காக 2012 ஆம் ஆண்டு இப்பாதையில் சென்னைக்கான ரயில் சேவை நிறுத்தப்பட்டது. 2018 - 19 ஆம் ஆண்டு அகல ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்ட பின்பு தற்போது 01.06.2023 ந் தேதி முதல் தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம் அதிவிரைவு ரயில் வாரம் மூன்று முறை மட்டும் இயக்கப்படுகிறது.
அதுபோல செகந்திராபாத் - இராமநாதபுரம் சிறப்பு விரைவு ரயில் வாரம் ஒரு முறை மட்டும் இயக்கப்படுகிறது. தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம் விரைவு ரயில் தாம்பரம் வரை இயக்கப்படுவதால் இப்பகுதியில் இருந்து சென்னை எழும்பூர் பகுதிக்கு செல்லும் இரயில் பயணிகள் தாம்பரத்தில் இறங்கி புறநகர் ரயில்களில் ஏறி மாற வேண்டி இருக்கிறது.
அதற்கான பயண சீட்டுகளையும் தாம்பரத்தில் மீண்டும் எடுக்க வேண்டியுள்ளது. தாம்பரத்தில் மாடிப்படிகளில் ஏறி புறநகர் ரயில்களுக்கு செல்ல வேண்டி உள்ளதால் முதியோர், கர்ப்பிணி பெண்கள், மூட்டு வலி உள்ளவர்கள்,மாற்றுத்திறனாளிகள் அதிக சுமையுடன் செல்லும் பயணிகள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர் .
திருச்சி - அரியலூர் - விழுப்புரம் வழியாகவும் திருச்சி - தஞ்சாவூர் - மயிலாடுதுறை - விழுப்புரம் வழியாகவும் மன்னார்குடி - திருவாரூர் - மயிலாடுதுறை விழுப்புரம் வழியாகவும் சென்னை எழும்பூருக்கு தினசரி விரைவு ரயில் வசதி உள்ளன. ஆனால் காரைக்குடி - பட்டுக்கோட்டை - அதிராம்பட்டினம் - திருத்துறைப்பூண்டி வழியாக சென்னை எழும்பூருக்கு ஒரு ரயில் கூட கிடையாது.
எனவே தென்னக ரயில்வே ராமேஸ்வரத்தில் இருந்து காரைக்குடி அறந்தாங்கி - பேராவூரணி - பட்டுக்கோட்டை - அதிராம்பட்டினம் - முத்துப்பேட்டை - திருத்துறைப்பூண்டி - திருவாரூர் - மயிலாடுதுறை - வழியாக தினசரி இரவு இரவு நேர ரயில்களை சென்னை எழும்பூருக்கு இயக்க வேண்டும்.
சென்னை எழும்பூரில் இருந்து இந்த தடத்தின் வழியாக மதுரைக்கு பகல் நேர விரைவு ரயிலை இயக்க வேண்டும். மயிலாடுதுறையில் திருச்சி - சென்னை திருச்சி சோழன் அதிவிரைவு இரயிலுக்கு இணைப்பு இரயிலாக காரைக்குடியில் இருந்து மயிலாடுதுறைக்கு ரயில் இயக்க வேண்டும். மேற்கண்ட அனைத்து இரயில்களும் முன்பு கம்பன் விரைவு இரயில் நின்று சென்ற அனைத்து இரயில் நிலையங்களும் நின்று செல்ல வேண்டும்.
இது தொடர்பாக பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்கத்தின் தலைவர் என். ஜெயராமன் செயலாளர் வ.விவேகானந்தம் ஆகியோர் இரயில்வே அமைச்சர், இரயில்வே வாரிய தலைவர், தென்னக ரயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஆகியோருக்கு தொடர்ந்து கோரிக்கை மனு அனுப்பி வருகின்றனர்." என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications