கஷ்டத்துக்கு கடன் கேட்டது குத்தமா..ஆரோக்கியசாமிக்கு சபலம்! படக்கென பாய்ந்து.. வெளியான பகீர் வீடியோ!
தஞ்சாவூர்: தஞ்சையில் குடும்ப சூழல் காரணமாக பணம் கேட்ட பெண்ணுக்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை தந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வீட்டுக்கு வந்து பணம் தருகிறேன் என்று கூறிய அந்த நபர் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போதே திடீரென அந்த பெண்ணை கட்டிப் பிடித்து அத்து மீறிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. விருதுநகர், சென்னை, திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை சம்பவங்களின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் தஞ்சாவூரில் ஒரு பெண் பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருக்கிறார்.

தஞ்சையில் குடும்ப சூழலால் கடன் கேட்ட பெண்ணுக்கு ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தஞ்சை அருகே நாஞ்சிக்கோட்டை பர்வீன் தியேட்டர் பகுதியில் வசித்து வருபவர் ஆரோக்கியசாமி. 60 வயதான அவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் என கூறப்படுகிறது. ஓய்வு பெற்ற பிறகு கிடைத்த பணத்தை வைத்து வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். குறிப்பாக பெண்களுக்கு மட்டுமே அவர் வட்டிக்கு பணம் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆரோக்கிய சாமியை தொடர்பு கொண்டு பணம் கேட்டிருக்கிறார்.
குடும்ப கஷ்டம் நிலவுவதால் 15 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு பணம் வேண்டும் என கேட்டு இருக்கிறார். அதற்கு பதில் அளித்த ஆரோக்கியசாமி,"உனக்கு நான் பணம் தருவதெல்லாம் ஒன்றும் பிரச்சனை இல்லை.. நீ எனக்கு அந்த பணத்தை திருப்பி தர வேண்டாம். எனக்கு மனைவி இல்லாததால் நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். தன்னிடம் தனிமையில் இருந்தால் போதும். பணத்தை திருப்பி தர வேண்டாம்" எனக் கூறியிருக்கிறார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தனக்கு வட்டிக்கு பணம் வேண்டாம் எனக் கூறிவிட்டு இப்படி அசிங்கமாக பேசாதீர்கள் என போனை கட் செய்து இருக்கிறார். அதற்கு பிறகு அந்த பெண்ணை தொடர்பு கொண்ட ஆரோக்கியசாமி வீட்டுக்கு வந்து பணத்தை தருகிறேன் இது குறித்து வெளியில் சொல்ல வேண்டாம் என தொலைபேசியில் பேசியிருக்கிறார். ஏதோ ஒரு விபரீதம் நடக்கப் போகிறது என தெரிந்து கொண்ட அந்த பெண் தனது வீட்டிலேயே தொலைபேசியை மறைவான இடத்தில் வைத்து வீடியோவை ஆன் செய்து இருக்கிறார்.
அப்போது வீட்டுக்கு வந்த ஆரோக்கியசாமி அமர்ந்தபடி பேசி உள்ளார். அப்போது பணம் கேட்டால் என்னிடம் நீங்கள் தவறாக நடக்க முயற்சிக்கலாமா என அந்தப் பெண் கேட்டுள்ளார். அப்போதும் அவர் நான் பணம் தருவதெல்லாம் பிரச்சனை இல்லை நீயும் கஷ்டப்படுகிறாய் வா தனிமையில் இருக்கலாம் என கூறி திடீரென எழுந்து அந்த பெண்ணை கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் அவரை தள்ளிவிட்டு விட்டு வட்டிக்கு பணம் கொடுத்தால் கொடுங்கள் இல்லை என்றால் இங்கிருந்து வெளியே கிளம்புங்கள் என அவரை திட்டி வெளியே அனுப்பி இருக்கிறார்.
இந்த நிலையில் தனக்கு ஆரோக்கியசாமி பாலியல் தொல்லை கொடுத்த வீடியோவை அந்த பெண் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஆரோக்கியசாமிக்கு இதுதான் வேலை எனவும் வட்டிக்கு பணம் தருவதாக கூறி பல பெண்களுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் ஆரோக்கியசாமிக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications