KS அழகிரிக்கு ரூட் கிளியர்! 2024 தேர்தல் வரை மாற்றமில்லை! முற்றுப்புள்ளி வைத்த தினேஷ் குண்டுராவ்!
தஞ்சை: தமிழ்நாட்டில் 2024 நாடாளுமன்றத் தேர்தலை கே.எஸ்.அழகிரி தலைமையில் தான் காங்கிரஸ் சந்திக்கும் என அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் மிகத் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
இதன் மூலம் தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் தினேஷ் குண்டுராவ். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர் இதனைக் கூறினார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவும், வெற்றியை ஈட்டவும் கே.எஸ்.அழகிரிக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை எதிர்பார்த்த பலரும் கலக்கம் அடைந்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக உள்ள கே.எஸ்.அழகிரி தனது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்துவிட்டார். இருப்பினும் அவரை உடனடியாக மாற்ற விரும்பாமல் பதவி நீட்டிப்பு செய்து கூடுதலாக போனஸ் பீரியட் வழங்கிவருகிறது கட்சி மேலிடம்.
இதற்கு காரணம் கே.எஸ்.அழகிரி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் சந்தித்த எல்லா தேர்தல்களிலும் வெற்றி மேல் வெற்றியை குவித்ததே எனத் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications