எடப்பாடி எப்படி ஆகலாம்? கண்ணீர்விட்ட சசிகலா.. மேடையிலேயே கலங்க வைத்த திவாகரன்.. நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: அதிமுகவை கைப்பற்றும் விதமாக புரட்சி பயணத்தை மேற்கொண்டு இருக்கும் சசிகலா இன்று தனது சகோதரர் திவாகரனுடன் கலந்து கொண்ட தஞ்சாவூர் நிகழ்ச்சி ஒன்றில் கண்ணீர்விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Recommended Video

    ADMK தலைமைப் பதவியை அடித்து, பிடிக்க நினைத்தால் அது நிலைக்காது - Sasikala

    அதிமுகவில் நேற்று நடந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார். அதோடு பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலும் அறிவிக்கப்பட்டு உள்ளது,

    இந்த நிலையில் எடப்பாடி பொதுச்செயலாளர் ஆனது செல்லாது என்று சசிகலா அறிவித்துள்ளார். என்னுடைய வழக்கு நிலுவையில் இருக்கும் போது தற்போது கூட்டிய பொதுக்குழுவே தவறானதும் அவர் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று இருக்கும் போது அவர் ஓபிஎஸ்யை நீக்கியது எவ்வாறு செல்லுபடியாகும் என்று சசிகலா கூறியுள்ளார்.

    சசிகலா

    சசிகலா

    அதிமுகவை கைப்பற்றும் விதமாக தற்போது புரட்சி பயணத்தை மேற்கொண்டுள்ள சசிகலா இன்று தஞ்சாவூர் சென்றார். அங்கு திவாகரனை சசிகலா சந்தித்தார். அமமுகவில் தினகரனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக திவாகரன் தனியாக செயல்பட தொடங்கிய கட்சிதான் அண்ணா திராவிட கழகம். சசிகலா சகோதரரான இவர் சசிகலாவிற்கு நெருக்கமாக இருந்தாலும், சசிகலா சிறைக்கு சென்ற பின் பெரிதாக அவரிடம் பேசவில்லை. அதிமுக - அமமுக மோதல், சசிகலா மீண்டும் அதிமுகவை கைப்பற்ற முயன்றது என்று பல விஷயங்களை திவாகரன் அவ்வப்போது சசிகலாவை விமர்சனமும் செய்து இருக்கிறார். இதனால் குடும்ப நிகழ்ச்சிகளிலும் இவர்கள் இருவரும் பெரிதாக ஒட்டாமல் இருந்தனர்.

    திவாகரன்

    திவாகரன்

    கடந்த முறை நடராஜன் நினைவு தினத்தில் கூட திவாகரனை சசிகலா பெரிதாக சந்திக்கவில்லை. இந்த நிலையில்தான் கடந்த சில வாரங்களாக சொந்தங்கள், உறவினர்கள், ஜாதி ரீதியான முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்களை ஒன்று திரட்டும் பணியில் சசிகலா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்காக விட்டுப்போன சொந்தங்களுடன் அவர் இணையவும் தயாராகி வருகிறார். அதன் ஒரு கட்டமாகவே திவாகரன் - சசிகலா கடந்த சில நாட்களாக பேசி வந்துள்ளனர்.

    குடும்பம் சேர்ந்தது

    குடும்பம் சேர்ந்தது

    சமீபத்தில் கூட சசிகலாவை புகழ்ந்து பேசிய திவாகரன், வி.கே.சசிகலாவின் நோக்கம் அதிமுகவை கைப்பற்றுவது இதற்கு காலம் பதில் சொல்லும் . சசிகலா தலைமையில் தலைமையேற்க ஒரு சிலரை தவிர அதிமுகவில் பெரும்பாலானோர் தயாராக உள்ளனர். வி.கே.சசிகலா சிறையிலிருந்து வந்து ஒரு வருடமாகியுள்ளது கட்சியில் ஒரு எதிர்பார்ப்புகளையும், சில நகர்வுகளையும் செய்து வருகிறார். சசிகலா அதிமுக பொதுச்செயலளாராக இருக்கிறாரோ இல்லையோ, அவர் தான் பொதுச்செயலாளர் என பொதுக்குழு உறுப்பினர்களின் தீர்மானத்தை இன்னும் பெரும்பால அதிமுகவினர் ஏற்று கொண்டுள்ளார்கள்., என்று பாராட்டி பேசி இருந்தார்.

    என்ன நடந்தது?

    என்ன நடந்தது?

    இந்த நிலையில்தான் சசிகலாவுடன் இணைந்து பணியாற்றும் முடிவை திவாகரன் எடுத்தார். அதன்படி சரியாக அண்ணா திராவிடர் கழகம் தொடங்கி 5 ஆண்டுகள் ஆன நிலையில் சசிகலா தலைமையிலான அதிமுகவில் இணைவதாக திவாகரன் அறிவித்தார். சசிகலாவுடன் இணைந்து பணியாற்ற போகிறேன் என்று திவாகரன் அறிவித்தார். இதற்கான இணைப்பு விழா இன்று நடைபெற்றது.

    சசிகலா விதி

    சசிகலா விதி


    தேர்தல் ஆணைய விதிப்படி சசிகலா அதிமுகவில் இல்லை., அவர் அதிமுக பொதுச்செயலாளரும் இல்லை. இருப்பினும் சசிகலாதான் அதிமுக பொதுச்செயலாளர், அவரின் கட்சியில் என் "அதிக" கட்சியை இணைக்கிறேன் என்று கூறி திவாகரன் இணைத்துள்ளார்.தஞ்சாவூரில் உள்ள தமிழரசி திருமண மண்டபத்தில் இன்று காலை 11 மணிக்கு இதற்கான விழா நடந்தது. இதில் சசிகலா கலந்து கொண்டார்.

    மீண்டும் சேர்ந்தனர்

    மீண்டும் சேர்ந்தனர்

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சசிகலா மிகவும் உணர்ச்சிகரமாக காணப்பட்டார். அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவி கொண்டு வரப்பட்டது, எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆனது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் காரணமாக முகம் வாடிப்போய் இருந்தது. சசிகலா இன்று மேடையில் மிகவும் உணர்ச்சிகரமாக காணப்பட்டார். சகோதரர் திவாகரனை கண்டதும் அவருக்கு கண்களில் கண்ணீர் முட்டியது.

    கண்ணீர்

    கண்ணீர்

    சசிகலாவை சிரித்தபடி வரவேற்ற திவாகரனை அவருக்கு சால்வை போட்டு மரியாதை செய்தார். அதோடு அருகில் அமர்ந்து சில நிமிடங்கள் பேசினார். பேசிக்கொண்டே இருந்த சசிகலா சில நிமிடத்தில் உடைந்து கண்ணீர்விட்டார். கையில் வைத்து இருந்த டிஷ்யூவை வைத்து கண்களை துடைத்தபடி காணப்பட்டார். திவாகரன் - சசிகலா இணைந்த நிலையில் பல மன்னார்குடி சொந்தங்களும் மீண்டும் சசிகலாவுடன் நட்பாகி உள்ளன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+