தஞ்சை அருகே கடலில் சிக்கிய அரிய வகை உயிரினம்.. திகைத்த மீனவர்கள்.. நெகிழ வைத்த செயல்
தஞ்சை: தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள கிராமத்தில், மீனவர் பிரபாகரன் என்பவரின் மீன்பிடி வலையில் அரியவகை கடல் வாழ் உயிரினமான கடல் பசு சிக்கி இருந்துள்ளது. அந்த கடல் பசு 7 அடி நீளமாக இருந்தது. இதையடுத்து பிரபாகரன் மற்றும் மீனவர்கள் வலையை அறுத்து, கடல் பசுவை உயிருடன் மீண்டும் கடலுக்குள் கொண்டு சென்றுவிட்டனர்.
கடல் பசு ஏன் அரிய வகை உயிரினம்: கடல் பசுக்கள் கடலில் மீன் பிடிப்பகுதிகளில் காணப்படும் தாவரங்களை தின்று வாழ்ந்து வருகின்றன. இந்த கடல் பசுக்கள் மன்னார் வளைகுடாப் பகுதியில் மிகவும் குறைவாக உள்ளன. கடல் பசுவின் இறைச்சி சுவைமிக்கதாக இருப்பதால் அதற்கு சந்தையில் கிராக்கி அதிகமாக உள்ளது.மேலும் இவற்றின் பற்களைப் பொடி செய்து நச்சு முரிவு மருந்து தயாரிக்கவும் பயன்படுத்துவதாக சொல்லப்படுகிறது.

தலைவலி தைலம், மலச்சிக்கல் மருந்து, செருப்பு தயாரிக்க கடல் பசுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் காரணமாக கடல் பசுக்கள் அதிகமாக வேட்டையாடப்படுகின்றன. கடல் பசுக்கள் ஒரு யானைக்கு சமமான எடையுடன் காணப்படும். கடல் பசுக்கள் நாள் ஒன்றுக்குச் சுமார் 45 கிலோ எடை கொண்ட தாவரங்களை உண்ணும் என்று சொல்கிறார்கள்.
கடல் பசுக்களில் சில இனங்கள் அழியும் நிலையில் உள்ளன. கடல் பசுக்கள் மிகுந்த பயந்த சுபாவமுடையவை. இது மனிதர்களை எதுவும் செய்யாது.. ஆனால் வேட்டையாடுவதால் இது அரிய வகை விலங்கினமாக அரியப்படுகிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள கொள்ளுக்காடு கிராமத்தில் இருந்து மீனவர் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். நேற்று முன்தினம் இரவு கரைக்கு திரும்பினார்கள்.
அப்போது மீன்பிடி வலையில் அரியவகை கடல் வாழ் உயிரினமான கடல் பசு சிக்கி இருந்துள்ளது. அந்த கடல் பசு 7 அடி நீளமாக இருந்தது. இதையடுத்து பிரபாகரன் மற்றும் மீனவர்கள் வலையை அறுத்து, கடல் பசுவை உயிருடன் மீண்டும் கடலுக்குள் கொண்டு சென்றுவிட்டனர். இதையறிந்த பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரன் பாராட்டினார். 'வலையில் சிக்கிய கடல் பசுவை மீண்டும் கடலில் உயிருடன் விட்ட மீனவர்களை பாராட்டி ரொக்கப்பரிசு வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
கடல் பசு தொடர்பாக வனத்துறை, மீன்வளத்துறை, சமூக அமைப்புகள் இணைந்து, மீனவ மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதன் காரணமாக ஏராளமான கடல் பசுக்கள், அரியவகை கடல் ஆமைகள் மீண்டும் உயிருடன் கடலுக்குள் விடப்படுகிறது.












Click it and Unblock the Notifications