‛‛விஷமம்’’.. நான் அப்படி சொல்லவேயில்லையே! செங்கோல் பேட்டியால் கோபமடைந்த திருவாவடுதுறை ஆதீனம்!
தஞ்சாவூர்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. இந்த நிலையில் செங்கோல் மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் வழங்கியதற்கான ஆதாரங்கள் இல்லை என திருவாவடுதுறை ஆதீனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் தான் செங்கோல் விஷயத்தில் தவறான தகவல் பரப்பப்படுகிறது என திருவாவடுதுறை ஆதீனம் கொந்தளித்துள்ளார்.
இந்தியாவில் ரூ.971 கோடி மதிப்பீட்டில் புதிதாக நாடாளுமன்றம் கட்டப்பட்டது. இந்த நாடாளுமன்ற கட்டடம் கட்டும் பணி முடிந்த நிலையில் கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டது. கடந்த மாதம் 28 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்தார்.
மேலும் சபாநாயகர் இருக்கையின் அருகே செங்கோல் நிறுவப்பட்டது. இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை குறிக்கும் வகையில் ஆங்கிலேயரின் கடைசி வைசிராயாக இருந்த மவுண்ட் பேட்டன் மூலம் முதல் பிரதமர் நேருவுக்கு இந்த செங்கோல் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த செங்கோல் திருவாவடுதுறை ஆதீனம் உதவியோடு சென்னையில் தயாரிக்கப்பட்டது. இந்த செங்கோலின் மேற்புறம் நந்தி உருவம் உள்ள நிலையில் எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரஸ், திமுக உள்பட பல எதிர்க்கட்சிகள் செங்கோல் நிறுவ எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 28 ம் தேதி செங்கோலை புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நிறுவினார்.

இந்த விழாவில் மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீனம் உள்பட தமிழ்நாட்டில் இருந்து 21 ஆதீனங்கள் பங்கேற்று இருந்தனர். செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டாலும் கூட அதுபற்றிய விவாதம் மட்டும் இன்னும் முற்றுப்பெறவில்லை. இதற்கிடையே தான் ஆங்கில நாளிதழ் ஒன்று திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அளித்த பேட்டியை வெளியிட்டு இருந்தது. அதில், ‛‛செங்கோல் மறைந்த முன்னாள் நேருவிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு இந்தியாவின் கடைசி வைஸ்ராய் ஆன மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் வழங்கப்பட்டது பற்றி ஆவணங்கள் எங்களிடம் இல்லை'' என அவர் கூறியதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் இந்த செய்திக்கு திருவாவடுதுறை ஆதினம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தவறான தகவலுடன் விஷமம் பரப்பப்படுவதாக ஆதினம் சாடியுள்ளார். இதுதொடர்பாக திருவாவடுதுறை ஆதினம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: "ஜூன் 9ஆம் தேதி இந்து நாளிதழில் மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் செங்கோல் அளிக்கப்பட்டது பற்றித் தெளிவான தகவல் இல்லை என்று திருவாவடுதுறை ஆதீனம் கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது. இது வரலாற்றிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு உண்மைக்கு புறம்பாக விஷமத்தன்மையுடன் வெளியிடப்பட்டுள்ளது.
காலை பூசைக்குப் பின்னர் எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி நிருபர் ஆதினத்தை சந்தித்தார். 1947ம் ஆண்டு நிகழ்ந்த செங்கோல் வைபவத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தின் பங்களிப்பு குறித்து பெருமையடைகிறோம். திருவாவடுதுறையிலிருந்து ஒரு குழு செங்கோலை எடுத்துக் கொண்டு டெல்லி சென்றது. அங்கு மவுண்ட்பேட்டனிடம் செங்கோல் வழங்கப்பட்டது. அதன்பிறகு அந்த செங்கோல் அவரிடம் இருந்து பெறப்பட்டு கங்கையில் நீர் அபிேஷகம் செய்யப்பட்டு நேருவிடம் ஒப்படைக்கப்பட்டது என ஆதினம் கூறினார்.
இந்த சமயத்தில் நிருபர் குறுக்கீட்டு கேள்வி கேட்டார். ‛மவுண்ட்பேட்டனுக்கு செங்கோல் வழங்கப்பெற்றதா?' என நிருபர் கேள்வி கேட்டார். இதற்கு ஆதீனம், ‛‛செங்கோலானது நேருவுக்கு தான் வழங்கப்பட்டது' என கூறினார். மேலும் திருவாவடுதுறை ஆதீன வரலாற்றில் செங்கோல் சிறப்பு என்னும் அத்தியாயத்தில் செங்கோலானது மவுண்ட்பேட்டனிடம் கொடுக்கப்பட்டு பின்னர் கங்கை நீர் அபிஷேகத்திற்கு பிறகு நேருவிடம் ஒப்படைக்கப்பட்டது பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 1947 ல் 20ஆவது மகாசன்னிதானத்தின் அணுக்கத் தொண்டராக (தனிச் செயலர் போல்) இருந்தவரும் இப்போது 96 வயதைத் தொட்டிருப்பவருமான மாசிலாமணிப் பிள்ளையும் இந்த விஷயங்களை தெளிவாக எடுத்து கூறியுள்ளார். இதற்கிடையே தான் ஊடகத்தில் இத்தகைய செய்தி வெளியிட்டது ஆதினத்துக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மவுண்ட்பேட்டன் செங்கோலை ஏந்தியிருப்பது போன்ற புகைப்படங்கள் இல்லாததற்கு முக்கிய காரணம் உள்ளது. அதாவது செங்கோல் வழங்கியபோது ஆதினங்கள் கேமராக்களோடு செல்லவில்லை'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் இன்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கும் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், ‛‛அலகாபாத் மியூசியத்தில் இருந்து செங்கோலை பிரதமர் ந ரேந்திர மோடி புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நிறுவி உள்ளார். பூஜை மற்றும் திருமுறை மந்திரங்களுக்கு பிறகு இந்த செங்கோல் நாடாளுமன்ற லோக்சபா சபாநாயகர் இருக்கை அருகே நிறுவப்பட்டது. 2 நாட்களுக்கு முன்பு பத்திரிகை ஒன்றில் மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் செங்கோல் ஒப்படைத்ததற்கான ஆதாரங்கள் இல்லை என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இப்போதும் சரி, அப்போதும் சரி முதல்வர், பிரதமரை சந்திக்க சென்றால் நாங்கள் போட்டோகிராபர்களை அழைத்து செல்வது இல்லை. இதுதான் செங்கோல் வழங்கும்போதும் நடந்தது. ஆனால் சிலர் ஆதாரமில்லை என தவறான செய்திகளை வெளியிட்டுள்ளனர். இது வருத்தப்படக்கூடிய விஷயமாகும். அதேவேளையில் நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவி தமிழ்நாட்டை பெருமைப்படுத்திய பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்'' என தெரிவித்துள்ளார்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications