தஞ்சாவூரே வியந்துடுச்சே.. தம்பதி தந்த "தாம்பூலம்".. என்னனு கிட்டபோய் பார்த்தால்.. "அது"தான் ஹைலைட்டே
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த ஒரு விசேஷம், இணையத்தில் 2 நாட்களாகவே டிரெண்டாகி வருகிறது.. அப்படி என்ன நடந்தது தஞ்சையில்?
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத நிகழ்வு என்பதால்தான், இந்த திருமணத்துக்கு ஏழ்மையில் உள்ளவர்களும் கடன்வாங்கியாவது கல்யாணத்தை செய்வார்கள்.

அமர்க்களம்: வசதியில்லாதவர்களே இப்படி என்றால், வசதி படைத்தவர்களின் ஆடம்பரத்தை சொல்லவே தேவையில்லை.. வகைவகையான ஆடம்பரங்கள், தினுசுதினுசான நகைகள், பகட்டான சீர்வரிசைகள் என கண்களை பறித்துவிடும். . மணமக்கள் ஹெலிகாப்டரில் வந்திறங்குவதும், சாரட் வண்டிகளில் ஊர்வலமாக போவதும் என எத்தனையோ அமர்க்களமான திருமணங்களை நாம் கண்டுள்ளோம்..
மாட்டுவண்டிகள்: இதில் பெரிதும் ஆச்சரியங்களை கிளப்புவது சீர் வரிசைகள்தான்.. இன்னமும்கூட நம்முடைய பாரம்பரியத்தை பறைசாற்றும்வகையில், மாட்டு வண்டிகளில் சீர்வரிசை ஊர்வலம், ஜல்லிக்கட்டு காளை உள்ளிட்ட கால்நடைகளை மணமேடையில் பரிசளிப்பது போன்ற நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது..
திருமண விழா என்றில்லை... காதுகுத்து, மஞ்சள் நீராட்டுவிழா, புதுமனைப்புகு விழா என எந்த நிகழ்வுகள் என்றாலும், சீர்வரிசைகள் அமர்க்களப்பட்டுவிடுகின்றன.
அதேபோல, திருமண நிகழ்வுகளில், மணமக்களுக்கு அவர்களது சொந்த பந்தங்களும், நண்பர்களும், திருமணத்திற்கு வந்திருக்கும் அத்தனை பேரும் ஏதாவது, ஒருவகையில், பரிசுப்பொருட்கள் மூலம் புதுவித தாக்கத்தை ஏற்படுத்திவிடுவதை மறுக்க முடியாது.. அந்தவகையில், சமீபகாலமாகவே, மணமக்களுக்கு தரும் பரிசுகளில் வித்தியாசம் கூடிவருகிறது..

பாரம்பரியம்: குறிப்பாக, தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை காப்பாற்றும் வகையில், கலாச்சாரத்தை பிரபதிபலிக்கும் வகையிலும், புதுமண தம்பதிகளுக்கு திருமண பரிசு பொருட்களை தந்து அசத்தி வருகிறார்கள்.. கடந்த மாதம் விருதுநகர் மாவட்டத்தில் நடந்த ஒரு திருமணத்தில், நம்முடைய பாரம்பரியத்தில் கலந்துவிட்ட, சண்டை கிடாய்கள், சேவல்கள், நாட்டு இன நாய்கள் போன்றவைகளை சீர் வரிசைகளாக கொண்டு வந்து, மாப்பிள்ளைக்கு அவரது நண்பர்கள் தந்திருந்தார்கள்.
இப்போது, பரிசுப்பொருட்களையும் தாண்டி, தாம்பூலம் வழங்குவதிலும் வித்தியாசம் வந்துவிட்டது.. சமீப காலமாக அதற்கு மாற்றாக மரக்கன்றுகள், விதைப்பந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதோ தஞ்சையில் ஒரு திருமணம் நடந்துள்ளது.. இந்த திருமணத்தில் தாம்பூலத்தில் புத்தகப்பை தரப்பட்டுள்ளது.
சபாஷ் தம்பதி: கீர்த்தி - தினேஷ் இவர்கள்தான் மணமக்கள்.. 25 புத்தகங்கள் அடங்கிய 650 ரூபாய் மதிப்பிலான புத்தகப்பையினை, தங்கள் திருமணத்துக்கு வருகை புரிந்தவர்களுக்கு இந்த மணமக்கள் அன்பளிப்பாக அளித்துள்ளனர். "காதல் திருமண விழா" என்று அந்த பையில் அச்சடிக்கப்பட்டுள்ளது.
இதில் ஹைலைட் என்ன தெரியுமா? "ஆணும் பெண்ணும் ஜீவனில் ஒன்றுதான். ஒன்றுக்கொன்று உயர்வு - தாழ்வு கிடையாது இரண்டும் மனித ஜீவனேயாகும்" என்ற தந்தை பெரியாரின் மேற்கோள் எழுதப்பட்டுள்ளது அந்த புத்தகப்பையில்..
இதைத்தவிர, பெரியார், அம்பேத்கர், சேகுவேரா, திருக்குறள் உட்பட 25 புத்தகங்கள் அந்த பையில் இருந்துள்ளன.. ஒரு புத்தகப்பையின் மதிப்பு மட்டுமே ரூ. 650 ஆகியுள்ளதாம். மொத்தம் 200 புத்தகப்பைகள் வழங்கப்பட்டுள்ளன.. அப்படியானால், மொத்த மதிப்பு கிட்டத்தட்ட 1 லட்சத்தை தாண்டியிருக்கிறது போலும்.. இதற்கான செலவினை மணமகள் கீர்த்தி தன்னுடைய சேமிப்பிலிருந்தே செய்துள்ளாராம்.
தஞ்சை மணமக்கள்: தஞ்சை மணமக்களின் இந்த செயல்பாடுகள் பிறருக்கு ஊக்கத்தை தந்துள்ளதுடன், முன்னுதாரணமாகவும் விளங்கி கொண்டிருக்கிறது.. இந்த நிகழ்வுதான், இணையத்தில் வைரலாகி வருகிறது.. இதைப்பார்த்த நெட்டிசன்கள், மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தபடியே உள்ளனர்.. !
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications