எல்லா ரூமையும் சுத்தம் பண்ணு.. வார்டன் கொடுத்த டார்ச்சர்.. தஞ்சாவூரில் +2 மாணவி தற்கொலை.. பின்னணி
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பள்ளி ஒன்றின் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்த பிளஸ் 2 மாணவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் ஹாஸ்டல் வார்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூரில் மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளி ஒன்றில் அந்த மாணவி படித்து வந்தார். பள்ளிகள் திறக்கப்படவில்லை என்றாலும் தொடர்ந்து ஹாஸ்டலில் தங்கி வந்து இருக்கிறார். இந்நிலையில் கடந்த 9ம் தேதி அந்த மாணவி திடீரென வாந்தி எடுத்துள்ளார்.
அப்போது அவர் தனக்கு வயிற்றுவலி என்று கூறியதால் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் மறுநாள் அவரது தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாணவி
அந்த மாணவிக்கு உடல்நிலை அப்போது சரியில்லை என்று பெற்றோர்கள் நினைத்துள்ளனர். இதையடுத்து மாணவியின் தந்தை மைக்கேல்பட்டி வந்து தன் மகளை அழைத்து சென்றுள்ளார். மாணவிக்கு எந்த சிகிச்சை அளித்தும் பலன் இல்லை. அவருக்கு தொடர்ந்து உடல்நிலை மோசமாக இருந்ததால் கடந்த 15ம் தேதி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்களிடம் மாணவி, தான் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். அதுவரை அவருக்கு வெறும் வயிற்று வலி என்று கருதப்பட்ட நிலையில் திடீரென பூச்சு மருந்து குடித்ததாக மாணவி குறிப்பிட்டார். எனக்கு உடம்பில் எந்த பிரச்சனையும் இல்லை.. நான் பூச்சி மருந்தை குடித்துவிட்டேன் என்று மாணவி குறிப்பிட்டுள்ளார்.

சுத்தம் செய்ய வேண்டும்
விடுதியில் தன்னை அனைத்து அறைகளையும் தூய்மை செய்ய வேண்டும் என்று வார்டன் கூறியதால் தான் மனம் உடைந்ததாக அந்த மாணவி குறிப்பிட்டுள்ளார் தனக்கு வார்டன் தொல்லை கொடுத்ததாகவும், தனக்கு அவர் தினமும் அழுத்தம் கொடுத்ததாகவும் அந்த மாணவி கூறி உள்ளார். தனக்கு இதனால் பிற மாணவிகள் முன்னிலையில் அவமானம் ஏற்பட்டதாகவும் அந்த மாணவி கூறி இருக்கிறார்.

வார்டன் தொல்லை
தொடர்ந்து தரப்பட்ட அழுத்தத்தால் வேறு வழியின்றி பூச்சி மருந்தை குடித்ததாகவும் மாணவி தெரிவித்துள்ளார். இதையடுத்து டாக்டர்கள் திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் மாணவியிடம் வந்து விசாரித்தனர். இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி மாணவி மருத்துவமனையிலேயே இறந்து விட்டார்.

பூச்சு மருந்து
பூச்சு மருந்து சாப்பிட்ட நிலையில் நேற்று அவரின் உடல்நிலை மோசம் அடைந்தது. இதையடுத்து ஐசியூ பிரிவில் சேர்க்கப்பட்டார். உடல்நிலை மோசமான நிலையில் நேற்று அந்த மாணவி மரணம் அடைந்தார். இந்த வழக்கில் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வார்டன் சகாயமேரியை (62) போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
உலுக்கிடுச்சே.. மூடிய அறைக்குள் சிக்கிய காதலன்.. அரண்டு போன பிசினஸ்மேன் கணவன்! பெங்களூரு பகீர் -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications