சந்தேகம்! "அவனுங்களுடன் உனக்கென்ன பேச்சு"! வங்கி அதிகாரியை வெட்டிய கணவர்! விபத்தில் உடல் நசுங்கி பலி
தஞ்சை: தஞ்சையில் மனைவி உள்பட 3 பேரை வெட்டிவிட்டு காரில் தப்பிய கணவர் விபத்தில் சிக்கி உடல் நசுங்கி பலியானார்.
தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டை சாலை விக்டோரியா காலனியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஊழியராக வேலை பார்த்து வந்தவர் சுந்தர் கணேஷ். இவருக்கு வயது 44 ஆகிறது. எனினும் விருப்ப ஓய்வு பெற்றுவிட்டு வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.

தற்போது வேறு வேலைக்கு எதுவும் சொல்லாமல் வீட்டில் இருந்து வந்தாராம். இந்த நிலையில் சுந்தரின் மனைவி நித்யா வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அவருக்கு வயது 31 ஆகும். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் நித்யாவின் வீட்டிற்கு பால் வியாபாரிகளான தாமரை செல்வன், கோபிநாத் ஆகியோர் பால் சப்ளை செய்து வருகிறார்களாம். இவர்கள் அடிக்கடி நித்யாவிடம் பேசி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் பால் விநியோகம் செய்துவிட்டு இவர்கள் இருவரும் நித்யாவின் வீட்டுக்கு எதிரே எதேச்சையாக அமர்ந்திருப்பார்களாம்.
ஆனால் சுந்தர் கணேஷுக்கோ நித்யா மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால் நித்யாவின் நடவடிக்கைகளை கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் நித்யா தனது கணவருக்கு தெரியாமல் ஒரு வீட்டை 50 லட்சத்திற்கு வாங்கியிருந்தாராம். இதை சுந்தர் கணேஷ் எப்படியோ அறிந்துக் கொண்டாராம். இதையடுத்து எனக்கு தெரியாமல் வாங்கி வீட்டை விற்று விடு என்றாராம்.
இதற்கு நித்யா ஒப்புக் கொள்ளவில்லையாம். வீட்டை விற்று விடுமாறு கணவர் வற்புறுத்துவதை தாமரையிடமும் கோபியிடமும் நித்யா கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் ஒரு நித்யா, கோபியிடம் போனில் பேசிக் கொண்டிருந்தாராம். இதனால் சுந்தர் கணேஷ் ஆத்திரம் அடைந்ததாக தெரிகிறது. உடனே அந்த பால் விநியோகஸ்தர்களில் ஒருவருடன் நித்யாவுக்கு கள்ளக்காதல் என தவறாக நினைத்துக் கொண்டாராம்.
இதுகுறித்து நேற்று காலை இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அவனுங்களுடன் உனக்கு என்ன பேச்சு என சுந்தர் கேட்டுள்ளார். அப்போது நித்யா பேசுவதை கேட்டு சுந்தர் கணேஷ் கடும் கோபமடைந்தாராம். பிறகு வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து நித்யாவின் கழுத்து, தலை பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளார். மேலும் அந்த பெண்ணின் முடியையும் வெட்டியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்தார் நித்யா.
பின்னர் காரை எடுத்துக் கொண்டு பரிசுத்தம் நகர் யாகப்பா நகர் மெயின்ரோடு சந்திப்பில் உள்ள பால் நிலையம் அருகே திடீரென காரை நிறுத்தினார். உடனே அரிவாளுடன் கீழே இறங்கிய அவர் பால் நிலையத்திற்குள் சென்றார். அங்கிருந்த பால் கடை உரிமையாளர்களான தாமரைச் செல்வன் (34), கோபிநாத் ஆகியோரையும் சரமாரியாக வெட்டினார்.
இதையடுத்து அங்கிருந்தும் தப்பியோடிவிட்டார். காயமடைந்தவர்கள் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி கோபி என்பவர் இறந்துவிட்டார். வழக்கு பதிவு செய்த போலீஸார் சுந்தர் கணேஷை தேடி வந்தனர். இந்த நிலையில் சுந்தர் கணேஷ் தஞ்சை டூ திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக காரை ஓட்டிச் சென்றார்.
பின்னர் போக்குவரத்து விதிகளை மீறி வந்த வழியிலேயே காரை திருப்பி எதிர்புறமாக ஓட்டி வந்துள்ளார். அப்போது முத்தாண்டிப்பட்டி பகுதியில் எதிரே வந்த லாரி மீது சுந்தரின் கார் மோதியது, இதில் உருக்குலைந்த காரில் உடல் நசுங்கி உயிரிழந்தார் சுந்தர் கணேஷ். இந்த விபத்து குறித்து செங்கிப்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications