தஞ்சாவூரில்.. மாட்டுக் கொட்டகையில் "பெருமாள்".. அதுவும் 12 வருஷங்கள்.. மண்ணை பிளந்து வந்த ஆச்சரியம்
தஞ்சாவூர்: தஞ்சை அருகே சாமி சிலைகளை காரில் நடத்திய கும்பலால் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்த விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள்.
தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு குற்றப்புலனாய்வு துறைக்கு, தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மர்ம நபர்கள் சிலைகளை கடத்த முயற்சிப்பக ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது.

இதையடுத்து, தஞ்சை சரக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அன்றைய தினம் இரவே வாகன சோதனையில் ஈடுபட துவங்கிவிட்டார்கள்.. அந்த வழியாக வந்த ஒவ்வொரு வண்டியையும் நிறுத்தி சோதனை நடத்தினார்கள்.. அதேபோல, செங்கிப்பட்டி அருகே திருவிழாபட்டியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் சோதனை நடத்தப்பட்டது.
பெருமாள் சிலை: அதில், பெருமாள் சிலை இருப்பதை கண்டு போலீசார் அதிர்ந்தனர்... இரண்டரை அடி உயரத்தில், பழங்கால உலோகத்தால் அந்த சிலை செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த சிலையை வாங்கியது தொடர்பான ஆவணங்கள் எதுவுமமே அவர்களிடம் இல்லை..
இதையடுத்து, சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ராஜேந்திரன்(52), கும்பகோணம் ராஜ்குமார்(36), திருவாரூர் தினேஷ்(28), ஜெய்சங்கர்(58), கடலூர் விஜய் (28), டூவிலர்களில் நின்ற தஞ்சை ஹாரிஸ்(26) கடலூர் அஜித்குமார்(26) ஆகிய 7 பேரையுமே போலீசார் பிடித்து விசாரித்தனர்.

திடுக் தகவல்: அப்போதுதான் பல்வேறு திடுக் தகவல்கள் வெளியாகின.. தினேஷின் அப்பா 12 வருடங்களுக்கு முன்பு தொழுவூர் ஆற்றில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போதுதான், இந்த சிலை பெருமாள் சிலை கிடைத்துள்ளது. ஆனால், அந்த சிலையை, அதிகாரிகளிடம் ஒப்படைக்காமல், தன்னுடைய வீட்டிலுள்ள மாட்டு கொட்டகையிலேயே மறைத்து வைத்திருக்கிறார். இந்த சிலையின் மதிப்பு ரூ.2 கோடியாம்.
ஒருநாள் திடீரென தினேஷின் அப்பா திடீரென இறந்துவிட்டார். இதையடுத்து, இந்த சிலையை யாருக்காவது விற்றுவிட முடிவு செய்துள்ளார் தினேஷ்.. இதற்காக நண்பர்கள் மூலம் சென்னையை சேர்ந்த ராஜேந்திரன் உதவியை நாடியுள்ளார். இறுதியில், ரூ.2 கோடிக்கு வாடிக்கையாளரை பிடித்து, அவருக்கு அனுப்பி வைப்பதற்காக காரில் கொண்டுசென்றபோதுதான், போலீசில் சிக்கியிருக்கிறார்கள். காரில் சிலையை வைத்து கடத்துவதால், தினேஷுக்கு உதவியாக 2 பைக்கில் நண்பர்களும் கூடவே வந்துள்ளனர்.
விற்பனை: இப்போது 7 பேருமே கைதாகி ஜெயிலில் உள்ளனர்.. எனினும், இவர்கள் யாரிடம் விற்க சென்றார்கள்? புரோக்கர்கள் யாராவது இதில் ஈடுபட்டிருக்கிறார்களா? சிலை விற்பனை முயற்சியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்றெல்லாம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

பழங்கால உலோக சிலை கைப்பற்றப்பட்டு, கும்பகோணம் கூடுதல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டது.. கைப்பற்றப்பட்ட சிலையானது சோழர் காலத்தில் செய்யப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.. 15 முதல் 16ம் நுாற்றாண்டு சோழர்கள் காலத்தை சேர்ந்தாக இருக்கலாம் என தெரிகிறது.
தீவிர விசாரணை: அதுமட்டுமல்ல, தமிழகத்தில் அறியப்படாத கோயிலில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் தற்போது எழுந்துள்ளதாம்.. அதேபோல இந்த சிலையை வீட்டு கொட்டகையில் மறைத்து வைத்து பலமுறை விற்பனை செய்யவும் முயற்சி நடந்ததாக சொல்கிறார்கள். எனினும் விசாரணைக்கு பிறகே இதன் உண்மைதன்மை தெரியவரும்.












Click it and Unblock the Notifications