தஞ்சாவூரில் தடுமாறிய தமிழ்! அரசுப் பேருந்தில் திடீரென முளைத்த இந்தி! யார் பொறுப்பு? சரமாரி விமர்சனம்
தஞ்சாவூர்: தஞ்சாவூரில், அரசு பேருந்தில் இந்தியில் வரவேற்பு வாசகம் இடம் பெற்றிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாடு இருமொழிக் கொள்கையை தான் பின்பற்றி வருகிறது. இப்படி இருக்கையில் திடீரென இந்தி முளைத்திருக்கும் சம்பவம் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
மொழி என்பது வெறும் தொடர்புக்கான கருவி மட்டும் கிடையாது. அது மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கிறது. கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றையும் மொழி உள்ளடக்கியிருக்கிறது. எனவேதான் தமிழ்நாடு இன்று வரை தமிழை விடாது பிடித்து வைத்திருக்கிறது. அதுபோல பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் மட்டுமே கற்பிக்கப்பட்டு வருகிறது. இதுவே இன்று, தேசிய அளவில் தமிழ்நாடு பல விஷயங்களில் முன்னணியில் இருக்கிறது.

இந்த இரு மொழிக் கொள்கையை கலைக்க, பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக புதியக் கல்விக்கொள்கையில் மும்மொழி கொண்டுவரப்பட்டது. ஆனால், தற்போது வரை நாம் இந்த கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. பாஜகவினர், தமிழகத்தில் இந்தியை சொல்லிக்கொடுத்தால் என்ன பிரச்சனை என்று கேட்கிறார்கள். செம்மொழியான தமிழும், உலக தொடர்புக்கு ஆங்கிலமும் இருக்கும்போது, இந்திக்கு இங்கு என்ன வேலை என்று திமுக கேட்கிறது.
எனவே புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என்று, பிடிவாதமாக நாம் இருந்து கொண்டிருக்கிறோம். இப்படி இருக்கையில்தான் தஞ்சாவூரில் சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது.
அரசு பேருந்தின் டிஜிட்டல் போர்டில் 'நல்வரவு' என தமிழில் வருவதற்கு பதிலாக, இந்தியில் ஒளிபரப்பப்பட்டிருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மும்மொழியை ஏற்காத தமிழ்நாட்டில், அதுவும் அரசு பேருந்தில் இந்தி எப்படி ஒளிபரப்பப்பட்டது? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது குறித்து அரசு பேருந்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், வட மாநிலங்களிலிருந்து பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு இங்கு கொண்டுவரப்படுவதால், இந்தியில் வாக்கியங்கள் இருக்கும். இதை நாங்கள் அகற்றிவிடுவோம் என்று கூறியுள்ளனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications