ஒரே ஒரு டீலிங் தான்.. கொட்டோ கொட்டுனு கொட்டிய பணம்! தஞ்சாவூர் இன்ஸ்பெக்டருக்கு அடித்த யோகம்! ஆனால்..

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனை பங்குதாரர்கள் இடையிலான பிரச்சினையில், ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாக காவல்துறை அதிகாரி சுகுமார் மீது புகார் எழுந்தது. இவ்விவகாரத்தில் சிக்கிய தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுகுமாரன் வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.500 நோட்டுகள் எண்ணப்படும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் பங்குதாரர்கள் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு தரப்பினருக்கு ஆதரவாகக் காவல்துறையினர் செயல்படுவதாகவும், தங்களை மிரட்டி ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாகவும் அந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான சரவணன், தமிழக டிஜிபியிடம் புகார் அளித்தார்.

Thanjavur Bribe CBCID

இந்தப் புகாரின் அடிப்படையில், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டார். இதையடுத்து, கடந்த 9-ம் தேதி மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுகுமாரன் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியதுடன், அவரையும் கைது செய்தனர்.

இந்தச் சூழலில், காவல் ஆய்வாளர் சுகுமாரன் வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.500 நோட்டுகள் எண்ணப்படும் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ஏற்கெனவே இந்த விவகாரத்தில் தொடர்புடைய காவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் அடுத்தடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் திருச்சி சரக ஐஜி பாலகிருஷ்ணன் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சரவணன் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஐஜி தலையீட்டின் பேரில் தான் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் சுகுமாரன் மூலம் ரூ.5 கோடி பெறப்பட்டதாக சரவணன் தரப்பு கூறிகிறது. ஒதனால், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சரவணன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சுகுமாரனை உரிய விளக்கம் அளிக்க வாய்ப்பளிக்காமல் கைது செய்தது சட்டவிரோதமானது எனக் கூறி அவரை விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் முறையிடப்பட்ட நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளை அவரை விடுவிக்க உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் இரு தரப்பு பங்குதாரர்களும் மாறி மாறி செய்தியாளர் சந்திப்புகளை நடத்தி ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டியுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள வீடியோ கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்லது.

மருத்துவமனை பங்குதாரர்களுக்கு இடையில் என்ன பிரச்சினை? காவல் ஆய்வாளரின் வீட்டில் கட்டப்பஞ்சாயத்து நடைபெற்றதா? அந்தப் பணம் எதற்காக வழங்கப்பட்டது? இதில் வேறு அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+