ஹெலிகாப்டர் சகோதரர்களிடம் ரூ. 6 கோடி லஞ்சம்.. தஞ்சை எஸ்ஐ, இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு
தஞ்சாவூர்: நிதி மோசடி வழக்கு பதிவு செய்யாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்களிடம் ரூ.6 கோடி லஞ்சம் கேட்டு ரூ.10 லட்சம் அட்வான்ஸ் வாங்கியதாக தஞ்சையைச் சேர்ந்த சப்இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
கும்பகோணம், ஸ்ரீநகர் காலனி, தீட்சிதர் தோட்டம் தெருவைச் சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன். தொழிலதிபர்களான இருவரும் சகோதரர்கள். எப்போதும் ஹெலிகாப்டரிலேயே வலம்வந்ததால் ஹெலிகாப்டர் சகோதரர்கள்' என அழைக்கப்பட்டனர். கும்பகோணத்தில் விக்டரி ஃபைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம், கொற்கை கிராமத்தில் கிரிஷ் பால் பண்ணை மற்றும் வெளிநாடுகளிளிலும் பல தொழில்களை இவர்கள் செய்துவந்தனர்.

சொந்தமாக ஹெலிகாப்டர் மற்றும் இறங்கு தளம், பா.ஜ.க பிரமுகர்களுடன் நெருங்கிய நட்பு என தங்களை பிரமாண்டமாக அடையாளப்படுத்திக்கொண்டனர். தங்களுக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் இரட்டிப்பாகப் பணம் திருப்பி தரப்படும் என அறிவித்து செல்வந்தர்கள், வர்த்தகர்கள், பொதுமக்களிடம் நிதி வசூல் செய்துவந்துள்ளனர்.
இதற்காகத் தனியாக ஏஜென்ட்களை நியமித்து அவர்களுக்கும் பெரும் தொகை கமிஷனாகத் தந்திருகின்றனர். இதனால் பலரும் ஹெலிகாப்டர் சகோதரர்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். குறிப்பாக, பெரும் முதலாளிகள் கோடிக் கணக்கில் முதலீடு செய்தனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவியதிலிருந்தே முதலீடு செய்தவர்களுக்குப் பணம் சரியாகக் கொடுக்கவில்லை என்ற சர்ச்சை எழுந்தது.
பணத்தை முதலீடு செய்தவர்கள் பலரும் தாங்கள் பணம் கொடுத்த ஏஜென்ட்டுகளை நெருக்கத் தொடங்கினர். பத்துக்கும் மேற்பட்ட ஏஜென்ட்டுகள் ஸ்ரீநகர் காலனியிலுள்ள ஹெலிகாப்டர் சகோதரர்கள் வீட்டுக்குப் படையெடுக்கத் தொடங்கினர்.
பணம் திரும்ப கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாமல் போகவே கும்பகோணத்தைச் சேர்ந்த பலரும் மாவட்ட தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது பண மோசடி புகார் அளித்தனர். புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் உள்பட சிலரை கடந்த 2021ம் ஆண்டு கைது செய்தனர்.
தற்போது அனைவரும் ஜாமினில் வெளியில் உள்ள நிலையில், பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு டிஎஸ்பி முத்துக்குமார், ஆய்வாளர் சுதா உள்ளிட்ட போலீஸார் கும்பகோணத்தில் உள்ள வங்கியில், அவர்களது பெயரில் உள்ள கணக்குகள், நகைகள் உள்ளிட்டவை குறித்து கடந்த மாதம் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனிடையே நிதி மோசடி வழக்கில் சிக்கிய ஹெலிகாப்டர் சகோதரர்களிடம் வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதாக தஞ்சாவூர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் உதவி ஆய்வாளர் ஆகியோர் காவல் கண்காணிப்பாளர் பெயரை பயன்படுத்தி ரூ.6 கோடி லஞ்சமாக கேட்டதாக புகார் எழுந்தது. இதற்காக ரூ.10 லட்சம் அட்வான்ஸ் பெற்றுள்ளனர். இந்த புகாரின் பேரில் எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
காவல் ஆய்வாளர் சோமசுந்தரம், உதவி ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கியதாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து இருவர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை பரிந்துரை செய்துள்ளது.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள்












Click it and Unblock the Notifications