Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கும்பகோணத்திலே 75 வயசு பூசாரிக்கு குபீர்னு வந்த சபலம்.. கோயிலுனுகூட பார்க்கலயே.. தஞ்சாவூர் அசிங்கம்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: காலங்கள் கடந்தும், பெண்களின் மீதான வன்முறைகளும், பாலியல் தாக்குதல்களும் குறைந்தபாடில்லை. நம்முடைய நாட்டில் பெண்களுக்கு எதிராகவும், பெண் குழந்தைகளுக்கு எதிராகவும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.. இதுபோன்ற பாலியல் குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.. எனினும் குற்றங்களை தடுக்க முடியவில்லை.. நேற்று ஒரே நாளில் 2 பேர் போக்சோவில் கைதாகி உள்ளனர்.. இருவருமே 50 வயதை கடந்தவர்கள்.. இருவருமே 13 வயது சிறுமிகளை பலாத்காரம் செய்துள்ளனர்.

சிறார்களின் நலனை காப்பதற்காகவே போக்சோ உள்ளிட்ட எண்ணற்ற சட்டங்களும் அமலில் உள்ளன.. இவை அனைத்துக்கும் மேலாக பாலியல் வக்கிரங்களை அரங்கேற்றுபவர்களை தண்டிக்க நீதிமன்றங்களும் நமக்கு துணையாய் நிற்கின்றன..

Thanjavur Kumbakonam Priest

13 வயது சிறுமிகள்

ஆனாலும்கூட, பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு என்பதே சந்தேகத்துக்கிடமாகி விட்டது. , சிறுவர்களுக்கும் பாதுகாப்பின்மை நிலவுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. அதிலும் சமீப காலமாக படித்த பெண்களே போக்சோவில் கைதாகி வருவது, வருத்தத்தையும், பீதியையும் ஏற்படுத்தி வருகிறது.. இப்படி கைதாகுபவர்கள் பெரும்பாலும் ஆசிரியைகளாகவே இருப்பது அதைவிட அதிர்ச்சியை தந்துவிடுகிறது.

நேற்று கள்ளக்குறிச்சி, தஞ்சை மாவட்டங்களில் என்ன நடந்தது? கள்ளக்குறிச்சி சங்கராபுரம் அடுத்துள்ள பொய்குணம் என்ற கிராமத்தில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார்.. இவருக்கு 52 வயதாகிறது.. இவர் கடந்த மாதம் 8ம் தேதி 13 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்..

போக்சோவில் சிவக்குமார்

இது குறித்த புகாரின் பேரில் சிவக்குமார் மீது போக்சோ சட்டத்தில் திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து, விழுப்புரம், வேடம்பட்டு ஜெயிலிலும் அடைத்தனர்... பொது அமைதி மற்றும் ஒழுங்கிற்கு தீங்கு விளைவிக்கப்படும் செயலில் தொடர்ந்து ஈடுபடக்கூடும் என்பதால் சிவகுமாரை தடுப்புக் காவலில் கைது செய்ய SP மாதவன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

பிறகு, கலெக்டர் பிரசாந்த் உத்தரவின் பேரில், சிவக்குமார் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை திருக்கோவிலுார் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சுமதி வேடம்பட்டு ஜெயிலில் வழங்கவும், சிவக்குமார் கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.. விரைவில் சிவக்குமாருக்கு நீதிமன்ற தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

கும்பகோணத்தில் அசிங்கம்

அதேபோல தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது திருவலஞ்சுழியில் பிரசித்தி பெற்ற விநாயகர் ஆலயம்.. இந்த கோவிலானது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சுவாமிமலை முருகன் கோயிலின் இணைக்கோயில் ஆகும்.

மிகவும் சக்தி வாய்ந்த கோயில் என்பதால் சுற்றுவட்டாரத்திலிருந்து ஏராளமானோர் இந்த கோயிலுக்கு தினமும் வந்து செல்வார்கள்.. இந்த கோவியில் அர்ச்சகராக உள்ளவர் விஸ்வநாதர்.. இவருக்கு 75 வயதாகிறது..

அசிங்கமான செயல்

கடந்த மாதம் 8ம் தேதி பாபநாசம் மெலட்டூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, தன்னுடைய குடும்பத்துடன் இந்த கோயிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளார். அப்போது உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்காக சிறுமி தனியாக சென்றிருக்கிறார்.

அப்போது அங்கு வந்த அர்ச்சகர் விஸ்வநாதர், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தன்னுடைய வக்கிர புத்தியையும், காட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் செய்வதறியாமல் திகைத்த அந்த சிறுமி, அழுது கொண்டே வெளியே வந்துள்ளார். உடனே பெற்றோர் பதறிப்போய், என்ன நடந்தது என்று விசாரித்தால், அர்ச்சகர் செய்த அசிங்கமான செயலை சொல்லி கண்ணீர் விட்டுள்ளார்.

75 வயதான அர்ச்சகர்

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக கோயில் நிர்வாகத்திடமும், கும்பகோணம் மகளிர் போலீசிலும் புகார் செய்தனர். இந்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார், 75 வயதான அர்ச்சகர் விஸ்வநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கோயிலுக்கு வந்த பெண் குழந்தையிடம், 75 வயதான அர்ச்சகர் செய்த அசிங்கமான காரியம், கும்பகோணத்தில் பெரும் அதிர்ச்சியையும், சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+