ஜன.7ம் தேதி தஞ்சையில் உள்ளூர் விடுமுறை.. குட் நியூஸ் சொன்ன மாவட்ட ஆட்சியர்!
தஞ்சாவூர்: தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு முடிந்து, பொங்கல் விடுமுறைக்காக எல்லோரும் காத்துக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில், பொங்கலுக்கு முன்னதாகவே, ஜனவரி 7ம் தேதி அதாவது நாளை மறுநாள் தஞ்சாவூருக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு, வரும் 7ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்திருக்கிறார்.

கர்நாடக இசை உலகின் பிதாமகர் என்று அழைக்கப்படும் சத்குரு தியாகராஜ சுவாமிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் இசை அஞ்சலி செலுத்தப்படுகிறது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒவ்வொருவரான தியாகராஜர், 1847 ஆம் ஆண்டு புஷ்ப பகுல பஞ்சமி அன்று, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் முக்தி அடைந்தார். அவர் மறைந்த அந்த நாளை நினைவு கூறும் விதமாகவே, ஒவ்வொரு ஆண்டும் ஆராதனை விழா நடைபெறுகிறது.
இந்த விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடப்படும். தியாகராஜர் இயற்றிய ஆயிரக்கணக்கான பாடல்களில் மிகச்சிறந்த ஐந்து பாடல்களே பஞ்சரத்தினங்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஐந்து பாடல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து, ஒரே சுருதியில், ஒரே தாளத்தில் ஒருமித்த குரலில் பாடுவார்கள்.
ஜகதாநந்த காரகா (நாட்டை ராகம்)
துடுகு கல (கௌளை ராகம்)
ஸாதின்ஞசனே (ஆரபி ராகம்)
கனகன ருசிரா (வராளி ராகம்)
எந்தரோ மஹானுபாவுலு (ஸ்ரீ ராகம்)
இதைத்தான் பஞ்சரத்ன கீர்த்தனைகள் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் வரும் புஷ்ய பகுல பஞ்சமி தினத்தன்று, இந்த விழா நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி இந்த விழா நடைபெறுகிறது. எனவே இதற்காக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications