தஞ்சாவூர் லோக்சபா தொகுதி: 8 முறை திமுக வென்ற கோட்டை.. சரித்திரத்தை முறியடிக்க போராடும் அதிமுக அணி!
தஞ்சாவூர்: 8 முறை திமுக வென்ற தஞ்சாவூர் லோக்சபா தொகுதியை புதியதாக களமிறக்கப்பட்ட முரசொலி தக்க வைத்துக் கொள்வாரா? என்பது பெரும் எதிர்பார்ப்பு.
தஞ்சாவூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகள்: மன்னார்குடி, திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி. இத்தொகுதியில் காங்கிரஸ் 8 முறையும் திமுக 8 முறையும் அதிமுக 2 முறையும் வென்றுள்ளது.

தஞ்சாவூர் லோக்சபா தொகுதி மொத்த வாக்காளர்கள்: 14,94,216; ஆண்கள்- 7,23,787; பெண்கள் - 7,70,300; 3-ம் பாலினத்தவர்- 129
2009-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
பழனிமாணிக்கம்(திமுக) 4,08,343
துரை பாலகிருட்டினன்(மதிமுக) 3,06,556
பி. இராமநாதன்(தேமுதிக) 63,852
2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
பரசுராமன்(அதிமுக) 5,10,307
டிஆர் பாலு(திமுக) 3,66,188
கருப்பு முருகானந்தம்(பா.ஜ.க) 58,521
கிருஷ்ணசாமி வாண்டையார் (காங்கிரஸ்) 30,232
2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
எஸ். எஸ். பழனிமாணிக்கம்(திமுக) 5,88,978
நடராஜன்(த.மா.கா) 2,20,849
முருகேசன்(அமமுக) 1,02,871
கிருஷ்ணகுமார் (நாம் தமிழர் கட்சி) 57,924
செல்வராஜ் (சுயேட்சை) 28,274
2024-ல் களத்தில்
முரசொலி(திமுக)
சிவநேசன் (தேமுதிக)
கருப்பு முருகானந்தம்(பாஜக)
ஹூமாயூன் கபீர் (நாம் தமிழர் கட்சி)
தஞ்சாவூர் கள நிலவரம்: காங்கிரஸ், திமுக வாக்கு வங்கி எஃகு கோட்டை போல உள்ள தொகுதி. திமுகவும் காங்கிரஸும் தலா 8 முறை வென்ற தொகுதி. திமுக மூத்த தலைவர் பழனி மாணிக்கம் 6 முறை வென்ற தொகுதி. 1996, 1998, 1999, 2004, 2009 ஆகிய 5 தேர்தல்களிலும் பழனிமாணிக்கம் வென்று புதிய சாதனை படைத்தார். இம்முறை பழனி மாணிக்கத்துக்கு திமுகவில் சீட் தரப்படவில்லை. காவிரி டெல்டா தொகுதியான தஞ்சாவூர் தொகுதியில் வேளாண் சாகுபடிதான் பிரதானம். காவிரி நீருக்கான போராட்டத்தில் பெரும் பாதிப்பை எதிர்கொண்டிருக்கும் தொகுதி. திமுக தொடர்ச்சியாக வெல்லும் அளவுக்கு செல்வாக்கான வாக்கு வங்கி உள்ளது. அதிமுக்வோ கூட்டணி கட்சிகளுக்கு தள்ளிவிடும் தொகுதியாக இருந்து வந்தது. இம்முறையும் தேமுதிகவுக்கு ஒதுக்கிவிட்டது. ஆனால் 2014-ம் ஆண்டு அண்ணா திமுகவும் கூட இத்தொகுதியில் வென்றது. 1977-ம் ஆண்டு எஸ்டி சோமசுந்தரம் வென்ற பின்னர் அதிமுகவுக்கு முதல் எம்பி 2014-ல் தான் இத்தொகுதியில் கிடைத்தது. திமுகவின் புதுமுகமான முரசொலி, கோட்டையை தக்க வைப்பாரா? என்பது ஜூன் 4-ந் தேதி தெரிந்துவிடும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications