Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இவ்வளவு வெடி பொருளா? அதுவும் பாஜக மாநில நிர்வாகி வீட்டில்! “எஸ்கேப்” ஆனவரை நெருங்கிய தஞ்சை போலீஸ்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே பாஜக மாநில பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில செயலாளர் வீட்டில் சக்தி வாய்ந்த வெடி பொருட்கள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை போலீசார் கைப்பற்றி இருக்கும், நிலையில் தப்பிச்சென்றவரை போலீசார் நெருங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த சாக்கோட்டை பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் பாஜக பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளராக பதவி வகித்து வருகிறார். கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளன. நாச்சியார்கோயில் காவல் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் உள்ளது.

Thanjavur Police nearing the BJP executive who stored expolisive in his home

கார்த்திகேயனின் வீட்டுக்கு பின்புறம் கருப்பூர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலையில் தனக்கு சிவக்குமாரிடம் 10000 சதுர அடி நிலத்தை தனக்கு எழுதித்தர வேண்டும் என்று பாஜக நிர்வாகி கார்த்திகேயன் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிவக்குமார் நாச்சியார் கோயில் காவல் நிலையத்தில் கடந்த 26 ஆம் தேதி கார்த்திகேயன் மீது புகார் அளித்தார்.

அந்த புகாரை தொடர்ந்து திருவிடைமருதூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையிலான 15 க்கும் அதிகமான காவல்துறையினர் பாஜக நிர்வாகி கார்த்திகேயன் வீட்டுக்கு சென்று இருக்கின்றனர். போலீசார் தனது வீட்டுக்கு வருவதை முன்கூட்டியே தெரிந்துகொண்ட கார்த்திகேயன் அங்கிருந்து தப்பிச்சென்று இருக்கிறார்.

Thanjavur Police nearing the BJP executive who stored expolisive in his home

இதனை தொடர்ந்து கார்த்திகேயன் வீட்டுக்குள் சென்ற போலீசார் அங்கு தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் வசித்துவந்த வீட்டிற்குள் சக்தி வாய்ந்த வெடிபொருட்கள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் போன்றவை இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் இருந்த பயங்கர ஆயுதங்கள், வெடிபொருட்கள், டிவிஆர் கண்டிரோல் யூனிட் மற்றும் அவரது கார் போன்றவற்றை பறிமுதல் செய்த போலீசார் அனைத்தையும் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

தப்பிச்சென்ற பாஜக நிர்வாகி கார்த்திகேயனை தேடி வரும் போலீசார், அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பயங்கர ஆயுதங்கள், வெடி பொருட்கள் தொடர்பாகவும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவர் இருக்கும் இடத்தை நெருங்கிவிட்டதாகவும் விரைவில் அவரை பிடித்து விசாரித்தால் வெடி பொருட்கள், பயங்கர ஆயுதங்களை பதுக்கியது ஏன் என்ற பின்னணி தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே பாஜக நிர்வாகி கார்த்திகேயன் மீது 2016 ஆம் ஆண்டில் சக்கரவர்த்தி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு, 2017 ஆம் ஆண்டில் சிவானந்தம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. அத்துடன் அவர் மீது 2 கொலை முயற்சி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இதன் காரணமாக நாச்சியார் கோயில் காவல் நிலைய ரவுடிகள் பட்டியலிலும் கார்த்திகேயன் பெயர் இருக்கிறது.

இந்த சூழலில் அவரது வீட்டில் வெடி பொருட்கள், பயங்கர ஆயுதங்கள் கைப்பற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாடு பாஜகவில் கடந்த சில ஆண்டுகளாகவே குற்றப் பின்னணி கொண்டவர்கள், ரவுடிகள் என பலர் சேர்ந்து பொறுப்புகளில் உள்ளது சர்ச்சையாகி இருக்கும் நிலையில் தற்போது கொலை வழக்குகளை கொண்ட பாஜக மாநில நிர்வாகியின் வீட்டில் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+