கும்பகோணம் புதிய மாவட்ட அறிவிப்பை 30-க்குள் வெளியிடாவிட்டால்.. அமைச்சருக்கு போராட்டக்குழு நெருக்கடி
தஞ்சை: தஞ்சையை பிரித்து கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும் என்று போராட்டக்குழு வலியுறுத்தியுள்ளது. அமைச்சர் கோவி செழியனால் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றால் உடனே பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தங்களுடன் களம் இறங்கி போராட வேண்டும் என்று போராட்டக்குழு நெருக்கடி கொடுத்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் கடந்த 2021 சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது, கும்பகோணத்தில் பேசுகையில், திமுக ஆட்சி அமைந்த 100 நாட்களில் கும்பகோணத்தை தலைமை இடமாக கொண்ட புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என கும்பகோணம் புதிய மாவட்ட கோரிக்கை போராட்டக்குழு வலியுறுத்தியுள்ளது.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் வாக்குறுதி அளித்து 1500 நாட்கள் கடந்த பிறகும் நிறைவேற்றப்படவில்லை என்று குற்றம்சாட்டிய போராட்டக்குழு போராட்டத்தில் குதித்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசை கண்டித்து நேற்று கும்பகோணம் எம்எல்ஏ அலுவலகம், மாநிலங்களவை உறுப்பினர் (எம்.பி) அலுவலகம் மற்றும் திருவிடைமருதூரில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் அலுவலகம், திருவிடைமருதூர் எம்எல்ஏ அலுவலகம் ஆகிய இடங்களில் கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் போராட்டக்குழுவினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காவல்துறை அனுமதியின்றி நடந்த இந்த போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். கும்பகோணம் உழவர் சந்தை பகுதியில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ம.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடந்தது. இதில் அமமுக, தமாகா, தேமுதிக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
ஒரே நாளில் கும்பகோணம் எம்எல்ஏ அலுவலகம், மாநிலங்களவை உறுப்பினர் (எம்.பி) அலுவலகம் மற்றும் திருவிடைமருதூரில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் அலுவலகம், திருவிடைமருதூர் எம்எல்ஏ அலுவலகம் என மூன்று வெவ்வேறு இடங்களில் முற்றுகை போராட்டங்கள் காரணமாக கும்பகோணத்தில் நேற்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த போராட்டம் குறித்து கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ம.க. ஸ்டாலின் பேசுகையில் , "பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ள கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும் என்று கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக ஆட்சிக்கு வரும் முன்பு வாக்குறுதி அளித்தது.
ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் இதுவரை கும்பகோணம் மாவட்டம் அமைப்பது குறித்து எந்த அறிவிப்பையும் முதல்வர் வெளியிடவில்லை. இப்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும். வரும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் புதிய மாவட்ட அறிவிப்பு வெளியிடப்படாவிட்டால் அமைச்சர் கோவி.செழியன், எம்எல்ஏ ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும். அதன் பின்னர் எங்களோடு இணைந்து அவர்கள் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்" இவ்வாறு பேசினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications